பக்கம்:தேவநேயம் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

246) தேவநேயம் அரத்தம் அர் - அரத்து - அரத்தம் - 1. சிவப்பு. “அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ" (சிலப். 14:86) 2. அரத்தம். 3. அரக்கு. 4. பவளம் 5. செம்பரத்தை 6, செங்கழுநீர் 7. செம்பருத்தி. 8. செங்கடம்பு. 9. செந்துணி (துகில்). 10. செம்மெழுகு, அரத்தம் (குருதி) - வ. ரக்த. ஒ.நோ. முத்தம் - வ. முக்த. அலத்தகம் - அரத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு. (சீவக 2459), அரத்தம் - அரத்தன் = செவ்வாய். அலத்தி - அரத்தி = செவ்வல்லி. (சிந்தா. நி.). அரத்தம் - அத்தம் = சிவப்பு. அத்தம் - அத்தி = செங்கனி மரம். அரத்து - அத்து - 1. சிவப்பு. “ஆய்ந்தளந் தியற்றியவத்து ணாடையர்” (சீவக. 1848), 2. துவர். “ஆடுநீரன வத்து மண்க ளும் (சீவக. 2418). உல் - இல் - இல - இலகு. இலகுதல் = விளங்குதல். “வெண்ப லிலகுசுடர் இலகு விலகுமகர குண்ட லத்தன்” (திவ். திருவாய், 8:8:1), ம. இலகு. இலகு - இலங்கு, இலங்குதல் = திகழ்தல். (பிங்.), இலங்கு - இலக்கு, இலக்குதல் = சொலிப்பித்தல், “எரியத்திரத் திலக்கியே” (சைவ, பொது, 294), இலக்கு - இலக்கம் = ஒளி விளக்கம். "எல்லே யிலக்கம்” (தொல். இடை -21). ஒ.நோ . L. luc, lux, Gk, luke. இல் - இலக்கு = 1. சிவந்த அரக்கு, 2. அரக்குக் குறி. 3. அடையாளம். அங்கே போக உனக்கு இலக்குச் சொல்கிறேன். 4. குறிப்பொருள். இலக்கு வைத்து எய்து பழக வேண்டும். 5. குறித்த இடம். அந்த இலக்கிலே உன்னைப் பார்த்தேன். 6. நாடிய பொருள். இலக்கை நோக்கிக் தொடருகிறேன். (விவிலி. பிலிப். 3:14), 7. வெல்ல வேண்டிய போட்டி அல்லது எதிரி. இவனே உனக்கு இலக்கு. இலக்கு (அரக்கு) - E. lac. இலக்கு (குறி) - இ.லக் (lakh. வ. லஷ்), இலக்கு - இலக்கம் = 1. குறி 2, எண்குறி. “குறியிலக்க மெழுதே” (தைலவ. பாயி. 15), 3. குறிப்பொருள். “இலக்க முடம்பிடும்பைக்கு” (குறள், 627), 4. நூறாயிரம். "இலக்கத்தொன்பதின்மர்” (கந்தபு, திருவவதார. 1271, இலக்கம் - வ. லக்ஷ். இலக்கம் - இலங்கம் = குறி, இலங்கம் - வ. லிங்க. சிவ விலங்கம் (சிவலிங்கம்), மாவிலங்கம் (மாவிலிங்கம்) என்பன தமிழ்ச் சொற்களே. இல் - இலத்து - இலத்தை - இலந்தை = செம்பழம், செம்பழ முட்செடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/263&oldid=1431833" இலிருந்து மீள்விக்கப்பட்டது