பக்கம்:தேவநேயம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரத்தம் பாவாணர் 247 இலத்து - இலத்தி - இரத்தி = இலந்தை. “இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து" (புறநா. 34:12). இல் - இர் - இராகி = சிவந்த கேழ்வரகு. ம., க... தெ, து ராகி (g). இல் - எல் = 1. ஒளி. 'எல்லே யிலக்கம்' (தொல். இடை 21), 2. கதி ரவன், “எற்படக் கண்போல் மலர்ந்த” (திரு முரு 74), 3. வெயில், (பிங்), 4. பகல், “எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி" (புறநா. 170), 5. நாள், (பிங்.), 6. வெண்மை . எல் - எல்லி = 1, கதிரவன். (பிங்.), 2. பகல். “இரவொடெல்லியு மேத்துவார்” (தேவா. 344:8). எல் - எல்லோன் = கதிரவன். (பிங்.). எல் - எல்பு - என்பு = 1. வெள்ளையான எலும்பு. "என்பிலதனை வெயில் போலக் காயுமே” (குறள். 77.) 2. எலும்போடு கூடிய உடம்பு, "என்பு முரியர் பிறர்க்கு ” (குறள். 72), ஒ.நோ.: அல் + 4 = அன்பு. அல்லுதல் = பொருந்துதல் நல் - (நல்பு) - நன்பு, வல் - (வல்பு) - வன்பு. எல்பு - எலுபு - எலும்பு = வெள்ளையான உறுப்பு. ம. எலும்பு, க., து. எலு, தெ. எம்மு . எல்பு -L.albus, white, LL.alba, white. E. alb, white vestment reaching to feet, wornby priests. OE., ME. albe. E. albata, white metal. L. albata, whitened. Port. albino, white Negro. E. albite, white or soda fieldspar. E. album, book of white sheets for insertion of autographs, photographs, etc.) E. albumen, white of egs. E. albuminuria, presence of albumen in the urine. E. alburmum, recently formed white wood in exogamous trees. எல் - எர் - எரி, எரிதல் = 1. வேதல். 2. விளங்குதல், திகழ்தல். 3.காந்துதல், 4. எரிச்சலுண்டாதல். 5. சினத்தல். 6. வருந்துதல், பொறாமை கொள்ளுதல். ம., து. எரி, தெ. எரியு. க. உரி, எரி = 1. நெருப்பு.2. நெருப்புத் தேவன். 3. நரகம். 4. விளக்கம். 5. கந்தகம். எரிச்சல் = 1. வேகை. 2. அழற்சி, 3. காந்தல். 4. உறைப்பு. 5. சினம். 6.பொறாமை. 7. சிவப்பு, எரிமலர் = 1, செந்தாமரை மலர். 2. முண்முருக்கம்பூ. எர் - எரு = காய்ந்த சாணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/264&oldid=1431834" இலிருந்து மீள்விக்கப்பட்டது