பக்கம்:தேவநேயம் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

254 தேவநேயம் அலத்தகம் என்னும் எடுத்துக்காட்டுச் செய்யுளால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையையும் வடமொழி தமிழுக்குப் பட்டுள்ள கடப்பாட்டின் அளவின்மையையும், தம் உள்ளான தமிழ்ப்பற்றினால் உலகிற்குணர்த்தியுள்ளார் என்னலாம். (வ.வ.) அலத்தகம் அலத்தகம் - அலத்தக - அலத்தகம் - அரத்தகம். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு, (வ.வ.80) அலத்தம் அலத்தம் - அலக்த அலத்தம் - அரத்தம். அலத்தம் = செம்பருத்தி, எல் (கதிரவன்) - இல் - அல். (வ.வ. 80) அலப்பு அலப்பு - லப் லப்-ரப் (இ.வே.) = அலப்பு. (வ.வ BO.) அலமரல் 'அலமரல்' 'தெருமரல்' 'உழலுதல்' என்னும் சொற்கள் குற்ற வாளிகளைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். 'அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி' என்பது தொல் காப்பியம் (சொல். 25) அவ்வை அம்மை = அவ்வை (தாய், பாட்டி) ஔவை ஒரு புலத்தியார் பெயர், ஒரு பொதுப் பெயர் இயற்பெயராகும் போது எழுத்து மாறுவது நன்றே. இவ்வழக்கை ஆங்கிலர் செருமானியர் முதலிய மேலையர் பெயர்களிற் காணலாம். (த.இ.வ.177, அவ்வை - அக்கை. தம் அவ்வை தவ்வை. தம் அக்கை தமக்கை என்பது போல. (தி.ம1!4) அவம் அவிதல் = வேதல், அழிதல், கெடுதல். அவி - அவம் = கேடு, வீண், அவம் - அவ - அப் (வ.). (தி.ம737) அவரை அவரை avarai. வழங்கும் இடம் - தமிழகம் சொல்வகை: அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/271&oldid=1431842" இலிருந்து மீள்விக்கப்பட்டது