பக்கம்:தேவநேயம் 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அலங்காரம் பாவாணர் இறு - இறுங்கு = காக்காய்ச் சோளம். இல் - எல் = இரவு எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி.8) எல்லிருள் = இராவிருள், எல் - எல்லி = 1. இரவு. “எல்லியிது காலையிது” (சீவக. 1877) 2. இருள். “நீரரை யெல்லியியங்கன்மினே” (இறை, 20, எடுத்துக் காட்டுச் செய்யுள் 217) எல்லிதாயகன் = திங்கள். எல்லிப்பகை = கதிரவன். எல் - என் - ஏன் = கரியவிலங்கான பன்றி. ஏனொருவனா யெயிற்றில் தாங்கியதும் (திவ். இயற். நான். 70) ஏன் - ஏனம் = பன்றி. இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் (தொல். பொ. 623) ஏன் - ஏனல் = கருந்தினை (சூடா) ஏன் - ஏனை - யானை - ஆனை, இன்றும் யானையை ஏனை என்னும் வழக்கு நெல்லை நாட்டில் உள்ளது. T. enuga, M.ana, K., Tu.ane. இரு - எரு - எருமை = கரிய மாடு. "குவிமுலை படர்மருப் பெருமை " (சீவக. 2102), M. eruma,Tu. erme,T.enumu, K. emme. s. heramba. எருமை மறம் மறவனொருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ713) "ஒருவ ணொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும் (தொல். பொ.72) (வே.க) அலங்காரம் வடமொழியில் முதன் முதற் சிறப்பாகக் காவ்யா தர்சம் என்னும் அணியிலக்கணம் தொகுத்தவர் தண்டி. இவர் தென்னாட்டார்; காஞ்சியில் வாழ்ந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் காலம் கி.பி. 650-700, தமிழ்த் தண்டியலங்காரம் இயற்றியவரும் இவரேயாயின். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/270&oldid=1431841" இலிருந்து மீள்விக்கப்பட்டது