பக்கம்:தேவநேயம் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவநேயம் கள் - காள் - காளம் = கருமை. காள் - காளி = கரியவள். காள் - காழ் = கருமை. 252 அல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை (மதுரைக்காஞ்சி, 544) 2. இருள் (பிங்). 3. இரா (பிங்.). M.al. ஓ.நோ.மால்-மாலை. அல் - அல்லி = இரவில் மலரும் ஆம்பல், கரியமலருள்ள காயா. K. alamar, Tu. alimar. அல் - அலவன் = இரவில் விளங்கும் திங்கள். இரவில் நன்றாய்க் கண்தெரியும் பூனை. அல் - அல்லோன் = திங்கள் (பிங்) அல் - இல் - இர் - இரா - இர - இரவு இர் - இரு - இருள் - இருளன். இருள் - இருட்டு = இருள். அறியாமை K., M. irul, Tu. irlu, T. irulu. இரு - கரிய "இருமலர்க்குவளை" (சீவக. 1171) இருமை = கருமை. (சீவக. 1171) இரவு - இரவன் = திங்கள். இரவன் - இரவோன் - இராவோன், "இரவன் பகலோனும்" (தேவா. 571, 4). இரவு - இரவம் = இருள்மரம் (புறம். 281). இரா - இராகு = கருங்கோள் S. rahu. இராப்பு = ஆம்பல் முதலியன (சிலப். 2:14 உரை) இரா - இராத்திரம் - இராத்திரி - ratri (S.) இருண்மலம் = ஆணவமலம். "இருள்மலத்தி னழுந்தி" (சிவப்பிர. 21 இருணிலம் = நரகம் (திவா.) இரு - இருந்து - இருந்தை = கரி. வலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று நாலடி 258) இருந்து - இருந்தில் = இருந்தை. (திங். பெரியதி.210.3) K. iddal M. irunnal. இரு - இரும் - இரும்பு = கரிய கனியம் (உலோகம்) M. irumbu, T. irunu. O.E. iren, E. iron. O.E.Iser, isen, OS. OHG, ON isam, Goth, eisarn, S. ayas. இரு - இறு - இறடி = கருந்தினை (திவா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/269&oldid=1431839" இலிருந்து மீள்விக்கப்பட்டது