பக்கம்:தேவநேயம் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அல் பாவாணர் 251 கணவனாகிய வசிட்ட முனிவன் ஒழுக்கத்தைப் பற்றி ஐயுற்று, அவனால் விண்மீனாகச் சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறு கின்றது. தமிழப் பத்தினிப் பெண்டிரோ, 'கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை', என்னுங் கொள்கையினர். ஆதலால், ஆதி மந்தியார், பூதபாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப் படை கடந்த நெடுங்செழியன் தேவியார், திலகவதியார் முதலிய எத்துணையோ தலையாய தமிழகக் கற்புத் தெய்வங் களிருக்கவும் அவரை விட்டுவிட்டு அருந்ததியை நினைப்பித்தல் கனியிருப்பக் காய் கவர்ந்த ற்றே . (த.தி.35.36.) அருந்து அருந்து - அத் (இ.வே.) Led, E eat ஒ.நோ. : மருந்து - மந்து (தெ), உந்து - உத்து, (வ.வ. 80, அரும்புவகை அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்பு போல் சிறிதாயும் கூராயுமிருப்பது; மொட்டு, அடுக்கு மல்லிகை நந்தியா வட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரி தாயும் மொட்டையாயுமிருப்பது, முகை தாமரை சதுரக்கள்ளி முதலியவற்றின் அரும்பு போல் பெரிதாயிருப்பது. (சொல் - 67) ‘அல்' (கருமைக் கருத்துவேர்) அல்லுதல் = பொருந்துதல், கலத்தல், மயங்குதல். அல்லுதல் = 1. முடைதல், "குருவி கூட்டை அல்லுகிறது” என்பது உலக வழக்கு "ஒரு கூண்டை அல்லுகிறவன் ஒன்பது கூண்டை அல்லுவான்” என்பது பழமொழி. 2. பின்னுதல், மரங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளு தலை. “அல்லிக் கொண்டன” என்பர். அல் = மயக்கம் (ஒழிவிலொடுக்கம், பொது. கவி. 6). அல் - அலவு = மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களும் அலவற்று மணிமேகலை 4:42) கலத்தற் கருத்தில் மயக்கக் கருத்தும், மயக்கக்கருத்தில் கருமை அல்லது இருட்கருத்தும் தோன்றும் அல்லார்ந்த மேனியொடு -- அந்தகா தாயுமானவர் பாடல்) ஒ.நோ. முயங்கு - மயங்கு - மயக்கம். முயல் - மயல் - மால் - மயக்கம், கருமை. கள்ளுதல் = பொருந்துதல், கலத்தல். கள் - கர் - கரு - கருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/268&oldid=1431838" இலிருந்து மீள்விக்கப்பட்டது