பக்கம்:தேவநேயம் 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

250 தேவநேயம் அரிதாள் வகை அரிதாள்வகை இருவி, நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள் கட்டை , சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள் தூறு, தென்னை , பனை முதலியவற்றின் அரிதாள் முருடு, வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள் (சொல் 65) அரிவரி தமிழ் நெடுங்கணக்கிற்கு 'அரிவரி' என்று பெயர் இருப்பது, அது இடைக்காலத்தில் 'அரிஓம்' என்று சொல்லித் தொடங்கப் பட்டதை அறிவிக்கும். (சொல் 23) அருக்கம் அருக்கம் - அர்க்க அருகு - அருக்கு. அருக்குதல் = அழித்தல், அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422). அருக்கு = எருக்கு. அருக்கு - அருக்கம். எருக்குதல் = 1. அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83:7). 2. கொல்லுதல் (திவா.), அருக்கு - எருக்கு, எருக்கஞ்செடி நஞ்சாதலால் இப்பெயர் பெற்றது. (வ.வ80) அருணம் அருணம் - அருண (இ.வே.) அர் - அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு. அருணம் - அருணன் = எழும் செங்கதிரோன். அருணமணி = மாணிக்கம். அருணமலை = தீப்பிழம்பாய் நின்ற தாகச் சொல்லப்பெறும் மலை. அருணமலை - அண்ணாமலை, அருணை. ஆதித்தரின் தாயாகச் சொல்லப்படும் அதிதியின் பெயரான ரு(r) என்னும் சொல்லினின்று, அருண என்னும் பெயர் பிறந்துள்ள தாக வடவர் கூறுவர். இவ் 'ரு' அர் என்னும் தமிழ் வேரின் திரிபாயிருக்கலாம். (வ.வ80) அருந்ததி காட்டல் அருந்ததி காட்டல் என்பதும் ஆரியத் தொடர்பு கருதியதே, தமிழ மரபுப்படி அருந்ததி தலையாய கற்பரசியல்லள். அவள் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/267&oldid=1431837" இலிருந்து மீள்விக்கப்பட்டது