பக்கம்:தேவநேயம் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரி அரத்தன் அரத்தன் - ரக்த அரத்தன் = செவ்வாய்.(பிங்.). அரத்தம் என்னும் சொற்குத் தமிழில், சிவப்பு. செந்நீர், பவழம், செங்கழுநீர், செங்கடம்பு, செம்பருத்தி, அரவம் செம்பரத்தை, செவ்வாடை (துகில்) என்னும் பொருள்களிருப்பதையும், வடமொழியில் அ + ரக்த என்று பிரித்துப் பொருந்தா மூலங்க காட்டுவதையும், நோக்குக. (வ.வ.: 79) பாவாணர் அரவம் - ரவ (இ. வே.) அர் - அரவு. அரவுதல் = ஒலித்தல், அரவஞ் செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89:3). அரவு - அரவம். "படையியங் கரவம்" (தொல், 1004). வடவர் 'ரு' என்னும் மூலங்காட்டுவர். அது அர் அல்லது அரவு என்னும் தென்சொல்லின் சிதைவே. அரவம் -ஆரவம்-ஆரவ (வ)=ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24). (வ.வ.79) அரன் அரன் - ஹர அரம் - அரன் = சிவன் (சேயோன்). அர் - அரம் = சிவப்பு. 249 off பிற்கால முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைக் கேற்ப,ஹ்ரு (அழி) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் வடவர், அது அரி என்னும் தென்சொல்லின் திரிபாம். சிவன் ஆரியத் தெய்வமல்லன். அவன் முத்தொழிலையுஞ் செய்கின்றான் என்பதே தமிழர் கொள்கை. (வ.வ79) அரி - ஹ்ரு அரித்தல் = அழித்தல். அரி - ஹரி அரி = காட்டிலுள்ள உயிரிகளையெல்லாம் அழிக்கும் விலங்கு (சிங்கம்) - பிங். வடசொன்மூலம் 'ஹரி' (பச்சை) எனக் காட்டுவர். அது பொருந்தாமை காண்க. (வ.வ. 79-80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/266&oldid=1431836" இலிருந்து மீள்விக்கப்பட்டது