பக்கம்:தேவநேயம் 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

256) தேவநேயம் அவரை அமுக்குவதனாலும் அழுத்துவதனாலும் ஓரிடம் பள்ளமாகும்; ஒரு பொருள் தட்டையாகும். அம் - அமல் - அவல் = 1. பள்ளம். "அவலிழியினும் மிசை யேறினும்”. (புறம். 102:3). 2. விளைநிலம். 3. குளம். 4. தட்டையாக இடித்த நெல்லரிசி அல்லது கம்பரிசி. பள்ளக் கருத்தினின்று குள்ளக் கருத்துந் தோன்றும். ஒ.நோ. பள் - பள்ளம். பள் - பள்ளை = 1. குள்ளம். 2. பள்ளையாடு, பள்ளையன் = குறுகித் தடித்தவன். பள்ளையாடு = குள்ளமான ஆடு, குள்ளக் கருத்தினின்று சப்பைக் கருத்துத் தோன்றும், ம - வ, போலி ஒ.நோ. செம்மை - செவ்வை. சும - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை அவல் - (அவலை) - அவரை = சப்பையான அல்லது தட்டையான காய்வகை. ஒ.நோ. அயில் - அயிலை - அயிரை. ல - ர, போலி. அவரை வகைகளிற் சில உருண்டு திரண்டிருப்பினும், பெரும்பான்மை நோக்கி அவை விலக்காகக் கொள்ளப்பட்டன. மேலும், பிஞ்சு நிலையிலேயே சமைக்குமாறு மருத்துவ நூல்கள் கூறுவதால், எல்லா வகைகளும் பிஞ்சு நிலையில் சப்பையாகவே யிருத்தலை நோக்குக. ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்பு பற்றியே பெயர் பெறுவது மரபு, வாழை, கத்தரி, முருங்கை, வெண்டை , பூசணி, சுரை, பீர்க்கு, புடலை, பாகல் முதலிய பிற காய்வகைகள் எல்லாவற்றோடும் ஒப்பு நோக்கி, அவரை யொன்றே தட்டையா யிருத்தலைக் கண்டறிக. பள்ளம் என்பது ஒன்றன் மேல்மட்டத்தின் தாழ்வு; குட்டை என்பது ஒன்றன் உயரத்தின் தாழ்வு; சப்பை என்பது ஒன்றன் திண்ணத்தின் அல்லது புடைப்பின் தாழ்வு, இம் முக் கருத்தும் ஓரினப்பட்டன. ஆழமில்லாத கிண்ணம் தட்டம் எனப் பெயர் பெற்றிருத்தல் காண்க. பொருள்வகை (1) ஆட்டுக் கொம்பவரை = ஆட்டுக் கொம்பு போல் வடிவுள்ள அவரை ; kind of bean that resembles goat's hom in shape. (2) ஆரால் மீனவரை = ஆரால் மீன் போன்ற வடிவுள்ள அவரை ; kind of bean that resembles sand - eel in shape. ஆனைக் காதவரை = ஆனைக் காது போல் வடிவுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/273&oldid=1431844" இலிருந்து மீள்விக்கப்பட்டது