பக்கம்:தேவநேயம் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் அவிழ் தன்னைத் தமிழனென்று சொல்லிக் கொள்பவனுக்குச் சற்றும் தகாது. செவியுணவுண்டு கொண்டே அவியுணவும் பெற இயலும்போது, ஒருவன் ஏன் தமிழைத் தள்ள வேண்டும்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழ்நாட்டில் தமிழரிடைத் தமிழிற் பேசித்தானே வாழவொண்ணும்! அது கருதியேனும் கூட்டுடைமைக் கொள்கையன் தமிழைப் போற்றுக. தான் போற்றாவிடினும் போற்றுவாரை இயன்றவரை போற்றுக. ("தென்மொழி” கும்பம் 1976,) அவீழ் அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு அறுசுவை நால்வகை அமிழ்தம் மணி 28:116) அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர், நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர். மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தை யுணவு (தி.ம. 42,) பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடை ஒப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம், பால், அமிழ்து = பால், (தி.ம:43) அவை - சபா (sabha#} - இ.வே. அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம். அமை - அவை ஒ.தோ. அம்மை - அவ்வை , குமி - குவி. அவையடக்கியல் அவையல்கிளவி என்பன, தொல்காப்பியர்க்கு முன்பே தொன்னூல்களில் வழங்கிவந்த இலக்கணக் குறியீடுகளாம். வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன. (தொல். 1367) அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். (தொல். 925) அவை - அவையம். தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள் 67) அவை - சவை. ஒ.நோ. இளை - சிளை, உதை - சுதை. சவை - சபா (வ.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/279&oldid=1431996" இலிருந்து மீள்விக்கப்பட்டது