பக்கம்:தேவநேயம் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவிழ்ந்துபோன... பாவாணர் 263 வடசொல் வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங்காட்டுவர். (வ.வ) (1) ஸ = ஸஹ (கூட). ஸ-ஸபா = கூட்ட ம். (2) பா (bha# ) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு (பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை. இப்பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும் தென் சொல்லொடு தொடர்புடையதாயிருக்கலாம். பால் = வெண்மை , “பாற்றிரு நீற்றெம் பரமனை” திருவாச (446), (3) ஸிப், இது உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச் சொல், ஆக்கசுப்போர்டுச் சிற்றகரமுதலியில் (C.O.D.) பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது. sib = a brother or sister, sibship = the group of children from the same two parents. OEsib (b), MDu sib (be), OHG sippi, Goth sibjis. இம் மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமாயிருத்தல் காண்க . (வ.வ. 80-81) அவை : அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம், அம்பலம், அமை - அவை. ஒ.நோ. அம்மை - அவ்வை , குமி - குவி. அவை - சவை, ஒ.நோ. அமையம் - சமையம், எட்டி - செட்டி அவை - அவையம், 'அம்' ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு, எ-டு; நிலை நிலையம், கம்பு - கம்பம், சவை - சபா (வ). (தி.ம. 737) அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைந்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொன்னூல்களில் கூறப்படுகின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. அகத்தியருக்கு முந்திய தமிழ் நூல்களில், செங்கோன்தரைச் செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது. தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட "எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக் கத்தன”வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட “கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையகவலுமென இத் தொடக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/280&oldid=1431997" இலிருந்து மீள்விக்கப்பட்டது