பக்கம்:தேவநேயம் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அளகம் பாவாணர் 265 பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் காலம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் செய்யுளாலறியலாம். மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்து போனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர்நிலைக்கல்வி யிழந்தமையும், இருபெருங் காரணங்களாகும். தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவுமான எத்துணையோ நூல்கள் இறந்துபட்டன. (ஒ.மொ.) அழிபசி கொல்வது போல வருத்துவதனாலும் குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும், பண்புகளையும் அழிப் பதனாலும் கடும்பசி அழிபசியாம். (தி.ம. 136,) அழுக்காறு அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு என நிற்கும். அழுக்குறுதல், பிறராக்கம் கண்டு பொறாது வருந் துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற் போன்று அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது, அழுக்கற் றகன்றாரும் இல்லை (170) என வள்ளுவரே கூறுதல் காண்க, நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க . (தி.ம.102,) அள் அள்-அல (முள்) - வ. ஒ.நோ. நுள் - நள் - நள்ளி = நண்டு, நள்-நளி = தேள். வடமொழி யில் அலி என்னுஞ் சொல் தேளையுங் குறிக்கும். (வ.வ.82.) அளகம் அளகம் - அலக - அள் = செறிவு. அள்ளுதல் = செறிதல். அள்ளல் = நெருக்கம், அளம் = செறிவு. அளம் - அளகம் = 1. பெண்ம யிர். (பிங்), செறிந்த கூந்தல். 2. மயிர்க் குழற்சி (பிங்.). (வ.வ.81.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/282&oldid=1431999" இலிருந்து மீள்விக்கப்பட்டது