பக்கம்:தேவநேயம் 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

266 தேவநேயம் அளவைகள் அளவைகள் பழந்தமிழாட்சியிற் பயன்படுத்தப்பட்ட அளவைகள், பெரும் பாலும் இக்காலத்துள்ள தமிழ் அளவைகளே. அவை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும். (1) எண்ணலளவை: எண்ணலளவை, சிற்றிலக்கம்பேரிலக்கம் என இருவகை. அரை கால் அரைக்கால் வீசம் (மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கமும், ஒன்று இரண்டு மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கமும் ஆகும். சிற்றிலக்கத்தில், கீழ்வாயிலக்கமென்றும் மேல்வாயிலக்கமென்றும் இருவகை யுண்டு . கீழரை (1/640), கீழ்க்கால் (1/1280), கீழரைக்கால் (1/2560), கீழ்வீசம் (1/5120), முதலியன கீழ்வாய்ச் சிற்றிலக்கமும், மேலரை (அரை), மேற்கால் (கால்), மேலரைக்கால் (அரைக்கால்) மேல்வீசம் (வீசம்) முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமுமாகும். கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தொடு ஒப்பு நோக்கியே, அரை, கால் அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும். மேல்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் மேல் முந்திரி என்னும் முந்திரி (1/320) யும், கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ்முந்திரி (1/102400) யும், ஆகும். (2) எடுத்தலளவை: எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்த லௗவையில், பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள் களை நிறுக்க ஒன்றுமாக, இருவகையுண்டு, பொன்னிறை யௗவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள் போல் நிறுக்கப்படும். கீழ்வருவது பொன்னளவை : 4 நெல் 1 குன்றிமணி 2 குன்றிமணி - 1 மஞ்சாடி 2 மஞ்சாடி - 1 வல்லம் (பணத்தூக்கம்) 10 வல்லம் 1 கழஞ்சு (16 அவுன்சு) கீழ்வருவது பிறபொருளளவை 4 கஃசு 1 பலம் (தொடி 8 பலம் 1 சேர் 5 சேர் 1 வீசை 212 வீசை 1 துலாம் (கா, தூக்கு, நிறை) 8 வீசை 1 மணங்கு 20 மணங்கு 1 கண்டி (பாரம்) சிலவிடங்களில் 5 வீசை கொண்டது ஒரு துலாமாக விருந்தது. அரச முத்திரையிட்ட அளவுக்கல், குடிஞைக்கல், பாடிக்கல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/283&oldid=1432000" இலிருந்து மீள்விக்கப்பட்டது