பக்கம்:தேவநேயம் 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

274 தேவநேயம் அறிவ (சித்த) மதம் நாட்டுக் குழப்பத்தினால் இழக்கப்பட்ட மானியவுரிமையை, குழப்பம் நீங்கியபின் சான்றுகாட்டி மீண்டும் பெற்றுக்கொள்ள அக்காலத்து இயல்கை (சாத்தியம்) இருந்தது. களப்பாளர் ஆட்சியில் இழக்கப்பட்ட வேள்விக்குடிப் பிரமதேய வுரிமை, இரு நூற்றாண்டிற்குப் பின் மீள நாட்டப்பெற்ற பாண்டிய வாட்சியின் ஏழாம் தலைமுறையில் புதுப்பிக்கப்பெற்றது. சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன், பரணர்க்குத் தன் மகன் குட்டுவன் சேரலைக்கொடுத்தது மகற்கொடை யாகும். மகற்கொடையாவது மகனை மாணவனாகக் கொடுத்தல், அரியணையைக் கொடுத்தது ஆட்சிக் கொடையாகும். ஆயின், அவர் அதை ஏற்கமறுத்து அவனிடம் அமைச்சுப் பூண்டார். கொடை மடம் : பண்டையரசருட் பலர்க்குக் கொடை ஒரு சிறந்த குணமாயிருந்தபோதே, ஒருவகையிற் குற்றமாகவும் இருந்தது, அது கொடை மடம் எனப்பட்டது. பேகன் ஓர் அருவினை யுயர்விலைக் கலிங்கத்தை ஒரு மயில்மேற் போர்த்தான். பாரி தன் இழையணி நெடுந்தேரை ஒரு முல்லைக் கொடி படர நிறுத்திய தொடு, தனக்கிருந்த முந்நூறூர்களையும் பரிசிலர்க் கீந்துவிட்டான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன்மேற் பத்துப்பாட்டுப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு, ஐந்நூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமுங் கொடுத்தான். களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு, பத்துப் பாட்டிற்கு நாற்பதிலக்கம் பொன்னும் தான் ஆண்டதிற் பாகமுங் கொடுத் தான். இங்ஙனம், அஃறிணையுயிரிகட்குத் தகாத பொருள் களையும், அரசு கெடும்படி பரிசிலர்க்கு நாடு முழுவதையும், பல புலவர் பசியால் வாட ஓரிரு புலவர்க்கு மாபெருஞ் செல்வத் தையும், அளித்தது கொடை மடமாம். (ப.த.ஆ) அறிவ (சித்த) மதம் 'அறிவன் தேயம்' என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால். உருவ வணக்கத்தை (Idolatry) யொழித்த உயர்ந்த அறிவமதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமை யுணரப்படும். பிற்காலத் திலிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. கடவுள் என்ற பெயர் எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க. அறிவு அறிவு என்னும் சொல் அறிதல் (Perception, understanding) அறிந்த செய்தி (knowledge), ஓதி (Wisdom) மதி (Intelligence) என்னும் நாற்பொருள் உணர்த்தும். - தி.ம.250.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/291&oldid=1432009" இலிருந்து மீள்விக்கப்பட்டது