பக்கம்:தேவநேயம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறுதொழிலோர் பாவாணர் ஓதல் பொருதல் உலகு புரத்தல் ஈதல் வேட்டல் படைபயிற லறுதொழில் என்று அரசர்க்கு அறுதொழில் கூறுகின்றது. வேட்டல் என்பது, ஏமாற்று வகையில் மூவேந்தரிடைப் பிற் காலத்துப் புகுத்தப்பட்ட ஆரிய வழக்கமாதலால், அதற்குப் பகரமாகத் தமிழரசர்க்குரிய தொழிலாகக் கொள்ளப்படுவது வேட்டையாடலே. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள். 259) என்று திருவள்ளுவருங் கூறியிருத்தல் காண்க. இனி, இறை (வரி) கோடல் என்பது அரசர்க்கு இன்றியமையாத தாதலின், அதையுஞ் சேர்ப்பின் எழுதொழிலுமாகும். முறை செய்தல் அல்லது தண்டஞ்செய்தல் உலகு புரத்தலுள் அடங்கும்; ஆயின், பொருதல் அடங்காது, பழவிறல் தாயத்தைக் காத்துக் கொள்வதற்கு மட்டுமன்றிப் புதுவிறல் தாயத்தை உண்டாக்கிக் கோடற்கும், போர் இன்றியமையாததென்பது பண்டைக் கொள்கை, 5. பிராமணர்க்கு அறுதொழிலின்மை தொல்காப்பியமும் எல்லா நிகண்டுகளும் பிராமணர்க்கு அறுதொழில் கூறியிருப்பினும், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்' என்னுந் தொல்காப்பியத் தொடருக்கு, “ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறு -. அவை 'ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம்” என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பினும், உண்மையிற் பிராமணர்க் குரியவை ஈதலொழிந்த ஐந்தொழிலே. இதை, ஓதல் முதலிய ஏனை ஐந்தொழிற்கும் சிறப்புச் செய்யுள்களை எடுத்துக்காட்டிய நச்சினார்க்கினியர். ஈதலுக்கும் ஈதற்சிறப்பிற்கும் மட்டும். இலனென்று மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள (குறள். 223) ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228) என்று பொதுச் செய்யுள்களையே எடுத்துக்காட்டியிருப் பதினின் றும், விருந்தோம்பலும் வேளாண்மையுமில்லாப் பிராமணர் இல் வாழ்க்கையினின்றும். “முட்டி புகும் பார்ப்பார்” என்னும் கம்பர் பாட்டினின் றும். அறிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/294&oldid=1432012" இலிருந்து மீள்விக்கப்பட்டது