பக்கம்:தேவநேயம் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

278 தேவநேயம் அறுதொழிலோர் ஓதல் வேட்ட லவையிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் றாறுடரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி பதிற்றுப் 241 என்பது, ஆரிய அடிமையான பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பாலைக் கௌதமன் என்னும் பிராமணப் புலவன் பாடியதாதலால், அளவைச் சான்றாகாது. வேதமோதுவித்த லையே ஈதலென்று கூறின் அது ஓதுவித்தலென்னும் ஒன்றேயன்றி வேறாகாதெனக் கூறிவிடுக்க. ஆகவே, பிராமணர்க்குரிய தொழில் ஐந்தே யென்பது தெரிதரு தேற்றமாம். அரசர்க்கு ஐந்தும் பிராமணர்க்கு ஆறுமாகத் தொல் காப்பியங் கூறுவது. உலகியற்கு மாறான இன்மை நவிற்சியே என அறிக.) 6. அந்தணர் வேறு, பிராமணர் வேறு அந்தணர் என்பவர், இருதிணை யுயிர்களிடத்தும் அருள் கூர்ந்து, துறவு மேற்கொண்டு ஐம்புலனடக்கி, இனமொழி குலமத இட வேறுபாடின்றி உலகப் பொதுவாய் உள்ளந் தூயராய உயர்நிலை இறைவனடியார். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 300 என்றார் திருவள்ளுவர். அந்தணரின் பிறவியல்புகளைத் திருக்குறட் பாயிர, நீத்தார் பெருமை யதிகாரத்திற் கண்டு கொள்க, பிராமணரோ, மாணவ (பிரமசரிய) நிலைக்குப் பின் இல் வாழ்க்கை (கிருகத்தம்) காடுறைவு (வானப்பிரத்தம்) என்னும் இருநிலைகளிலும் இயன்றவரை இன்பந்துய்த்து, ஐம்பொறியுந் தாமே அடங்கிய பின் துறவுக் கோலம் (சந்நியாசம்) பூண்டு. குலவெறியும் மொழி வெறியும் நீங்காது. ஆணவமும் தந்தலமும் மிக்க ஆரிய இனத்தார். இதனால், திருவள்ளுவர் குறித்த அந்தணர் வேறு; பரிமேலழகர் குறித்த பிராமணர் வேறு; என அறிந்து கொள்க. 7. நிகண்டுகள் ஆரியமுறை தழுவியன தமிழ் நிகண்டுகளெல்லாம் தமிழகத்தில் ஆரியம் வேரூன்றியபின் தோன்றியவையாதலால், பிறவியொடு தொடர்புற்ற குலவொழுக்கம் பற்றி அவை கூறுபவையெல்லாம் ஆரியச் சார்பானவேயாகும். உரிச்சொல் என்னும் பெயர் மாறி நிகண்டு என்று பெயர் பெற்றதே இதற்குப் போதிய சான்றாம். இயற்றமிழ்ப் பொருளிலக்கணம். கல்வி காவல் வணிகம் உழவு என்னும் நாற்பெருந் தொழில் பற்றி அகப்பொருட் டலைவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/295&oldid=1432013" இலிருந்து மீள்விக்கப்பட்டது