பக்கம்:தேவநேயம் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆக்கம் தருவன பாவாணர் உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை கற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கருமபூமி என்னும் திவாகர நூற்பாவிற் குறித்த அறுதொழிலைக் கற்றவரே யென்க. - "செந்தமிழ்ச் செல்வி” - 1970 அறைப்படுத்தல் அறைப்படுத்தல் எனினும் அறைபோக்குதல் எனினும் கீழறுத்தல் எனினும் ஒன்றே. கையூட்டால் காட்டிக் கொடுக்கச் செய்தல் என்பது இவற்றின் பொருள். (குறள் 747,) அன்னம் OE Gamra, OHG ganazzo, RV ஹம்ஸ - அன்ன ம், எகினம் ஓதிமம் என்பனவே தென் சொற்கள். மேலையாரியச் சொற்கள் முறையே பெருவாத்தையும் அதற்கினமான ஒரு கடற்பறவையையும் குறிப்பன. அவற்றின் திரிபான ஹம்ஸ என்னும் கீழையாரியச் சொல்லே, ஓதிமத்தின் பெயராக வழங்கிவருவதாகத் தெரிகின்றது. Swan என்பது ஆங்கிலச் சொல், (தி.மயின்,) அனல் அனல் - அனல அன் - அன்று, அன்றுதல் = சினத்தல். அன்று - கன்று. கன்றுதல் = சினத்தல், வெயிலாற் கருகுதல், அன் - அனல் - கனல் = நெருப்பு, கனலி = கதிரவன். அனல் = தீ, வெப்பம், இடி அனலுதல் = அழலுதல். அனலி = நெருப்பு, கதிரவன். அழல், அன்று. அனல் என்னும் சொற்களின் மூலம் அல் என்பது உய்த்துணரப்படும். அது வழக்கற்றது. அது எல் என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல், வடமொழியில் அன் என்பதை மூலமாகக் காட்டுவர். அதற்கு உயிர்த்தல், இயங்குதல் என்னும் பொருளே உண்டு, - வ.வ.81. ஆ ஆக்கம் ஆகுவது ஆக்கம், ஆகுதல் - மேன்மேல் உயர்தல், (தி.ம.55.) ஆக்கம் தருவன செல்வம், உடல்நலம், அறம், புகழ், அறிவு, நட்பு முதலியன. (குறள் 831)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/298&oldid=1432016" இலிருந்து மீள்விக்கப்பட்டது