பக்கம்:தேவநேயம் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

292 தேவநேயம் ஆட்சிமுறை வேண்டும் என்னும் யாப்புறவும் அரசனுக்கிருந்த தில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்வித் ததும், புதையலுரிமை எடுத்தவர்க்கே என்று பறை சாற்றுவித் ததும், இதற்குச் சான்றுகளாம். அரசன் செயல் - அரசன் தன் துணையதிகாரிகளும் புலவருங் கூடிய அவையுடன் அரியணையில் வீற்றிருத்தல், அரசு வீற் றிருக்கை என்றும் மகிழிருக்கை என்றும் ஒலக்கமிருக்கை என்றும் கொலு விருக்கை என்றும் கூறப்படும். அது பெரும் பாலும் காலையில் தொடங்குமாதலால், அதை நாளவை நாண் மகிழுருக்கை நாளோலக்கம் எனக் கூறுவதுண்டு. அரசன் அரசு வீற்றிருக்கும் மண்டபம், வேத்தியன் மண்டபம், ஓலக்கமண்ட பம், கொலு மண்டபம், அத்தாணி மண்டபம், சபாமண்டபம் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். அம் மண்டபத் திற்குச் சிறப்புப் பெயரிடுவதுமுண்டு. சடாவர்மன் குலசேகர பாண்டியனின் ஓலக்கமண்டபம் 'புகழாபரணம்' எனப் பெயர் பெற்றிருந்தது. அரசன் ஒவ்வொரு காரியத்தையும் அதற்குரிய சிறப்புக் குழுவுடன் அல்லது அதிகாரியுடன் கலந்து எண்ணுவானாயினும், அனைத்துக் காரியங்களையும் தலைமையமைச்சனோடு கூடிச் சூழ்ந்த பின்னரே ஒரு முடிவிற்கு வருவன். அரசிருக்கையிலும் சூழ்வினையிலும் அரசியும் உடனிருப்பது வழக்கம். அரசன் எக்காரியத்தைச் செய்தாலும், கணியன் குறித்த நன்னாளிலும் மங்கல வேளையிலுமே செய்வன். ஊர்ச்சபையார், நாட்டதிகாரிகள், கோயிற் கண்காணிப்பாளர், பொதுமக்கள் முதலியவருள், தனிப்பட்டவரோ ஒரு குழுவாரோ ஒரு காரியத்திற்கு அரசனுடைய ஒப்பத்தையேனும் தீர்ப்பை யேனும் பெறவேண்டி அவனிடம் வரின், அவர் தாமே நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது அரசனுக்கு அதைத் தெரிவிப்பர். அரசனுக்கு மிக வேண்டியவராயிருந்தா லொழிய நேரில் தெரிவிக்க முடியாது. அரசன் அக்காரியத்தை அதற்குரியவருடனெல்லாம் சூழ்ந்து. தன் கட்டளையை நேரி லாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாக வாவது பிறப்பிப்பன். அரசனுடைய ஆணைகளை ஓலையி லெழுதும்போதும் பின்னர் அவற்றுள் முக்கியமானவற்றைக் கல்லில் வெட்டும்போதும், அவை பிறந்த இடத்தையும் அமயத்தையும் பின்வருமாறு குறிப்பது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/309&oldid=1432028" இலிருந்து மீள்விக்கப்பட்டது