பக்கம்:தேவநேயம் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்சிமுறை பாவாணர் 291 (17) பிரித்தானியம் உடலை பிராமணியம் ஆதனையும் மட்டும் தாக்கி, ஆங்கில (ஆன்மாவையும்) அகக்கரணங் னுடன் நீங்கிவிட்டது. களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது. பிராமணர் தென்னாடு வந்து மூவாயிரம் ஆண்டாகியும், இன்னும் தமிழருடன் உறவாடாவிடினும் உடனுண்ணாவிடினும், ஒரு தெருவிற் குடியிருப்பதைக் கூட விரும்புவதில்லை . (தமிழர் வ) ஆட்சிமுறை அரசவொளி: பண்டைத் தமிழாட்சியில், அரசனே நாட்டிற்குத் தனி நாயகமாயிருந்தான். பெரும்பாலும், அவன் இட்டது சட்டமும் வைத்தது வரிசையுமாயிருந்தது. முழு நிறைவான தலைமையும் உடன் கொல்லும் அதிகாரமும் அவனுக்கிருந்த தால், அவன் குடிகள் யாவராலும் கண் கண்ட தெய்வமாகவே கருதப்பட்டான். 'திருவாக்கிற்கு எதிர்வாக்குண்டோ ?' 'அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்' என்னும் பழமொழிகள் அரசனுக்கிருந்த அதிகார வலியை யுணர்த்தும். அரசனுக் கின்றியமையாதவரும் அவனுக் கடுத்த படியாய் அதிகார முடையவருமான அமைச்சர் படைத் தலைவரும், அவனை மிக அணுகாது தீக்காய்வார்போல் ஒதுங்கி யொழுகினர். அவன் முன்னிலையில், பிறரொடு பேசாமையும் நகாமையும் சாடை காட்டாமையும், அவனைச் சுட்டாமையும், அவன் பிறரொடு மெல்லப் பேசுவதை உற்றுக் கேளாமையும், அவனொடு பயில்வார் போற்றிக் காக்கவேண்டிய ஒழுக்க நெறிகளாகும். அரசனிடத்தில் ஒன்றைக் கூறுவோர் அவனை வாழ்த்தியே கூறுவதும். அவனைக் காணும்போதும் அவனைவிட்டுப் பிரியும்போதும் பெருமக்கள் தலை வணங்கியும் பொதுமக்கள் நிலத்தில் விழுந்தும் கும்பிடுவதும் வழக்கம். அரசவுடைமைகள் தெய்வவுடைமைகள் போல் திருவென்னும் அடைமொழி பெற்ற பெயராலும், அரசவினைகள் தெய்வ வினைகள் போல் அருள் என்னும் துணைவினை கொண்ட வினைச்சொல்லாலும், குறிக்கப்பட்டன. அரசன் அமைச்சரொடும் படைத்தலைவரொடும் சூழ்ந்து வினை செய்வது வழக்கமாயிருந்ததேனும். அவன் விரும்பியதை நிறை வேற்றற்கு எதுவுந் தடையாயிருந்ததில்லை. தலைமை அமைச்ச னுக்கும் படைத்தலைவனுக்குங்கூட, அரசனால் வினவப்பட்ட காரியத்தைப்பற்றி அவர் தம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையே யன்றி, அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்திலது. மேலும் அமைச்சர் படைத்தலைவரொடு சூழ்ந்தே எதுவுஞ் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/308&oldid=1432027" இலிருந்து மீள்விக்கப்பட்டது