பக்கம்:தேவநேயம் 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

294 தேவநேயம் ஆட்சிமுறை பட்ட வழக்காயின்; அவ்வழக்காளிகள் தலைநகர்க்கு வந்த விடத்து அரசனே தீர்த்துவைப்பதும், அவர் வராது அரசனுக்கறி வித்த (அல்லது அவனிடம் முறையிட்ட விடத்து அதைத் தீர்க்கும் படி அவன் ஓர் அதிகாரியை அனுப்புவதும் வழக்கம். வன்கொலை யும் முறைகேடான கொலைத் தண்டமும் நிகழ்ந்த விடத்துக் கொலையுண்டாரின் ஆருயிர்க் கேளிர் அரசனிடம் முறையிடு தல் பொருட்டுச் சோழர் அரண்மனைப் புறவாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. பாண்டி நாட்டில் அஃதில்லையா யினும், பாண்டியர் காட்சிக் கெளியராயிருந்து அத்தகைய முறை யீடுகளைக் கேட்டு முறை வழங்கி வந்தனர் என்பது, கண்ணகி முறையீட்டா லறியப்படும். இனி, கடினமான வழக்கின் உண்மை காண்டற்கு இறைவன் திருமுன் பாடுகிடப்பதும் மாறுகோலம் பூண்டு சென்று பொதுமக்கள் கூற்றைக் கவனிப்பதும், பாண்டியர் வழக்கம். அரசன் தன் நாட்டு நிலைமையைப் பற்றி அமைச்சர் வாயி லாகவும், பிறர் நாட்டு நிலைமையைப் பற்றித் தூதர் வாயிலாகவும், இரண்டையும் பற்றி ஒற்றர் வாயிலாகவும், அடிக்கடி அறிந்து வருவன். ஒற்றருள் ஒருவன் கூற்றை அவனறியாது இன்னொருவன் கூற்றொடு ஒப்புநோக்கி, மூவர் கூற்று ஒத்தவிடத்தே அதை அரசன் நம்புவான். தன் நாட்டு நிலைமையையும் தன் நகர நிலைமையையும் தானே அறிவான்வேண்டி, இடையிடை நாடுகாவற் சுற்றுப்போக்குச் செல்வதும், மாறுகோலம் பூண்டு நகர நோட்டஞ் செய்வதும் அரசன் வழக்கம். விக்கிரமச் சோழன் 1122 இல் குடந்தைக்கரு கிலுள்ள பழையாறையிலும், 1123 இல் செங்கற்பட்டு மாவட்டத் தைச் சேர்ந்த குளிவளநல்லூரில் ஒரு குளக்கரை மண்டபத்திலும், 1124 இல் தென்னார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்னும் காட்டு மன்னார் கோயிலில் உள்ள அரண்மனையிலும், 1130 இல் தில்லைக் கருகில் ஓர் அரண்மனையிலும், இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுவதால், அவன் அடிக்கடி நாடுகாவற் சுற்றுப் போக்குச் சென்றமை அறியப்படும், மதுரையில் கொற்கைப்பாண்டியன் மாறுகோலம் பூண்டு நகர நோட்டம் செய்து, கீரந்தை ஊரிலில்லாதபோது அவன் வீட்டிற்குக் காவலாயிருந்து வந்தது நூற்புகழ்பெற்ற செய்தியாகும். அரசன் தன் நாடுகாவற் சுற்றுப்போக்கில், ஆங்காங்குள்ள அதிகாரிகள் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகின்றார் களாவெனக் கவனிப்பதும், ஊர்ச் சபையாரும் அறங்கூறவையத் தாரும் தீர்க்கமுடியாத வழக்குக்களைத் தீர்த்துவைப்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/311&oldid=1432030" இலிருந்து மீள்விக்கப்பட்டது