பக்கம்:தேவநேயம் 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்சி முறை பாவாணர் 295 குற்றஞ்செய்தவரைத் தண்டிப்பதும், தக்கார்க்குத் தானஞ்செய் வதும், குடிகள் முறையீடுகளைக் கேட்டு அவர்கள் குறைகளை நீக்குவதும், சீர்திருத்தமும் மக்கள் நலமும் பற்றிய ஆணைகளைப் பிறப்பிப்பதும், வழக்கம். இயற்கையாகவும் செயற்கையாகவும் நாட்டிற்குப் பெருந்துன்பம் நேர்ந்த காலங்களில், அரசன் அத்துன்பங்களை இயன்றவரை நீக்குவதும், அத்துன்ப நீக்கத்திற்காகத் தொண்டு செய்தவர்க்கு மானியம் அளிப்பதும் உண்டு, வெள்ளக்காலத்தில் கரைகட்டி உடைப்படைப்பதும், அழிந்த நிலத்தை மீள அளந்து அவ்வாண்டு இறைநீக்கிக் கொடுப்பதும், பஞ்சகாலத்தில் வரி நீக்கிப் பழநெல் விற்பதும், புயற்காலத்தில் இடிந்த கோயில்களைப் பின்னர்க் கட்டுவதும், கலகங்களைப் படைகொண்டு அடக்குவதும், கொள்ளை நோய்க் காலத்தில் (தெய்வகோபந் தணித்தற் பொருட்டுப்) பலியிட்டு விழவெடுப்பதும், காட்டு விலங்குகள் நாட்டில் வந்து சேதஞ்செய்யின் அவற்றை வேட்டையாடிக் கொல்வதும், கடல்கோள் நேர்ந்தவிடத்துப் பிறநாட்டுப் பகுதி களை வென்று அவற்றில் தன் குடிகளைக் குடியேற்றுவதும், துன்ப நீக்கச் செயல்களாம். சிற்றரசர் செயல்: சிற்றரச தாடுகட்கெல்லாம் தன்னாட்சி (Self Government) அளிக்கப்பட்டிருந்தது. திறையளத்தல் அல்லது படையுதவிப் போராற்றல் சிற்றரசர் செயலாம். அரசன் வலிகுன்றியபோது, அன்பற்றவரும் அதிகார விருப்பினரு மான சிற்றரசர், அரசனுக்கடங்காது தனியரசாகிவிடுவதும் அவனுடைய பகையரசரொடு தொடர்பு கொள்வதும் உண்டு. அத்தகைய சமையங்களில் அன்பும் உண்மையும் அடக்கமுமுள்ள சிற்றரசர் ஒன்று சேர்ந்து, அடங்காச் சிற்றரசர்க்கு மாறாகத் தமக்குள் ஒப்பந்தஞ் செய்துகொள்வது முண்டு. அது நிலைமைத் தீட்டு எனப்படும். 3 ஆம் குலோத்துங்கச் சோழனின் 27 ஆம் ஆண்டில், கீழ்க்குறித்த சிற்றரசர் பதின்மரும், அரசன் சார்பாகவும் அவனுக்கடங்காத சிற்றரசர்க்கு மாறாகவும் தம்முள் ஒப்பந்தஞ் செய்து கொண்டனர். (1) பாண்டிநாடு கொண்டானான சம்புவராயன், செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலிச் சோழ சம்புவராயன், (3) கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன், கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜ கம்பீரச் சேதிராயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/312&oldid=1432031" இலிருந்து மீள்விக்கப்பட்டது