பக்கம்:தேவநேயம் 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

296 தேவநேயம் ஆட்சிமுறை (5) குந்தன் நம்பூரலான இராஜராஜ நீலகங்கரையன். (6) அம்மையப்பன் மருதனான இராஜராஜ மூவேந்தரையன். பாவந்தீர்த்தானான இராஜேந்திர சோழச் சம்புவராயன், நரசிங்க வன்மனான கரிகால்சோழ ஆடையூர் நாடாழ்வான். சோமன் திருவண்ணாமலையுடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன். (10) | சோமன் வரந்தருவானான சோளேந்திர சிங்கப்பிருதி கங்கன். (மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (இராமச் சந்திர தீட்சிதர்) பக்87-88). நாட்டதிகாரிகள் செயல்: நாட்டதிகாரிகள் தம் நாட்டைச் சுற்றிப்பார்த்து, அதிலுள்ள ஊர்ச்சபையார் கோயில் கண்காணிப் பாளர் அறநிலையப் பாதுகாப்பாளர் முதலியோர் தத்தங் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனராவெனக் கவனிப்பதும், ஊர்க்கணக்கு கோயிற்கணக்கு அறநிலையக் கணக்கு முதலியவற்றைத் தணிக்கையிடுவதும், குற்றங்கண்ட விடத்துத் தண்டிப்பதும், ஆங்காங்குள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், அரசாணைகளை நிறைவேற்றுவதும், ஊர்ச்சபைத் தேர்தலை நடத்திவைப்பதும், செய்வர். சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் கண்காணிப்பிலும் பேரூரான நகர்கள் அரசனது நேரடியான கண்காணிப்பிலும், இருந்ததாகத் தெரிகின்றது. ஊர்ச்சபையார், தம் குற்றத்தை மறைத்தற்பொருட்டும் தம்மேற் குற்றத்தை ஏற்றாமைப்பொருட்டும், தம்மைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிகட்கும் தம்மை வினவவரும் வேறதிகாரிகட்கும் கை யூட்டும் கொடுப்பதுண்டென்பது; சடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில், ஓர் ஊர்ச்சபையார், வாரப்பற்றிலிருந்தும், கடமைப் பற்றிலிருந்தும் வரும் வாரத்தையும் கடமையையும், சுந்தரபாண்டி யனுடைய அதிகாரிகளின் நட்பைப் பெறச் செலவிட்டதி லிருந்து அறியக்கிடக்கின்றது. (Pandyan Kingdomp. 218-9), ஊர்ச்சபையார் செயல் : ஊர்ச்சபையாருள், ஒவ்வொரு வாரியத் தாரும் தத்தம் கடமையை ஆற்றிவந்தனர். அவருள் ஊர் வாரியத் தினர்க்கு , உரிமை (Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இருவகை வழக்கையுந் தீர்க்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், முழு அதிகாரமிருந்தது. அவரால் தீர்க்கமுடியாத வழக்கும், அவர் தீர்த்த வழக்கின் மேன் முறையீடும் (Appeal) அரசனிடம் கொண்டு போகப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/313&oldid=1432032" இலிருந்து மீள்விக்கப்பட்டது