பக்கம்:தேவநேயம் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்சி முறை பாவாணர் 297 308al. ஒரே வாரியத்திற்குரிய செய்தியை அவ்வவ்வாரியத்தாரும், பல வாரியங்கட்குரிய செய்தியை எல்லா வாரியத்தாரும், கூடிச் சூழ்ந்து முடிவுசெய்தனர். ஊர்ச்சபைக் கூட்டங்கள் காளமூதியும் பறைசாற்றியும் கூட்டப்பட்டன. கூட்டங் கூடுவதற்கு ஊர் மண்டபம் அல்லது மாளிகை இருந்தது. அஃதில்லா விடத்துக் கோயில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அவ்வப்போது வரும் அரசாணைகளைத் தலைமேற்கொண்டு அவற்றை நிறைவேற்றிவைப்பதும்; அவற்றுள் முக்கியமான வற்றையும் ஊராட்சியில் தாம் செய்துள்ள புதுமையான ஏற்பாடு களையும், கல்லில் வெட்டுவித்துச் சபை மண்டபத்திலாவது கோயில் மண்டபத்திலாவது பதிப்பிப்பதும்; ஊர்ச்சபையார் கடமையாகும். ஊர்க் குடியிருப்பையும், வெள்ளாண்மையையும் இரவிற் காவல் செய்வது பாடிகாவலன் வேலை. ஊரவையாரின் ஊராட்சி, ஊராண்மையென்றும் ஊரமை யென்றும் கூறப்படும். சிற்றூர்த் தலைவன் செயல்; ஆள்நிலப் பிரிவான ஒரு கூட்டூரின் பகுதியாய், ஒரே குலத்தார் அல்லது ஒரு குலத்தார் பெரும்பான் மையராக இருக்கும் சிற்றூரில், அவ்வக்குலத்திற்கும் இடத்திற்கு மேற்ப, அம்பலகாரன், ஊராளி, கவுண்டன், கிழவன், குடும்பன், சேர்வை (சேர்வைகாரன்) தலைமகன், தலைவன், நாடன் (நாடான், நாடாள்வி), நாட்டான், நாட்டம்பலம், நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், பட்டங்கட்டி, பட்டத்துப்பிள்ளை, பண்ணாடி, பெரியதனக்காரன், மணியக்காரன், மன்றாடி (மண்ணாடி மந்திரி, மூப்பன் முதலிய பெயர்களுள் ஒன்றைப் பூண்டு. ஊராரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தந்தையினின்று மகனுக்கு வரும் வழிமுறை யுரிமைப்படி ஊர்த்தலைவனாயிருப்பவன், தன் ஊர் வழக்குக்களில் கொலையொழிந்த பிறவற்றையெல்லாம் தானே தீர்த்துவந்ததாகத் தெரிகின்ற து. (Hindu Administrative Institutions in South India. p.262). சிற்றூரிலிருந்து அரசனுக்கு வரவேண்டிய வரிகளெல்லாம் ஒழுங்காய் வந்து, ஊரார் ஊர்த்தலைவனோடு முற்றும் ஒத்துப் போய்க் காரியங்கள் அமைதியாய் நடந்து வந்ததினால், அரசனும் நாட்டதிகாரியும் கூட்டூர்ச்சபையாரும் சிற்றூர் வழக்குத் தீர்ப்பில் பெரும்பாலும் தலையிடவில்லை. கூட்டூரைச் சேர்ந்த எல்லாவூர் கட்கும் பொதுவான செய்திகளையும், சிற்றூர்ச் செய்திகளில் ஊர்த்தலைவன் அதிகாரத்திற்கு மேற்பட்டவற்றையுமே, ஊர்ச் சபையார் கவனித்து வந்ததாகத் தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/314&oldid=1432033" இலிருந்து மீள்விக்கப்பட்டது