பக்கம்:தேவநேயம் 1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

310 தேவநேயம் ஆபதம் வெஃகு பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல். பிணா - பிணை. பிள் - பெள் - பெண் - பேண் - பேடு - பேடை பெள் - பெட்டை - பெடை பெள் - பெட்பு = விருப்பம். பெள் - வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வேண்டல், வெள் - வேள் - வேண் - வேண்டு. வெள் - வெள்கு - வெஃகு. வெஃகுதல் = பிறன் பொருளை விரும்புதல். கஃறு கல் - கால் = கருமை. “கால்தோய் மேனிக் கண்டகர்” (கம்பரா. வானர. 21) கல் - கள் - காள் - காளம் = கருமை. கள் +து = கஃறு (கருமை) கஃஃறென்னுங் கல்லதரத்தம் (தொல். எழுத், 40. உரை) கஃசு, கஃடு, கஃது, கஃபு முதலிய பிற ஆய்தச் சொற்களின் வேர்ப்பொருள்கள் மறைந்து போயிற்றென்க, ஆய்த வரிவடிவு ஆய்தவொலி, அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால், ஒருகால், அதன் வரிவடிவு அடுப்புக் கூட்டுப்போல் முப்புள்ளி வடிவாய் அமைக் கப்பட்டிருக்கலாம். முடிபு இதுகாறும் கூறியவற்றால், ஆய்தம் தமிழெழுத்தென்றும். அது லகர ளகர வகரத் திரிபான நுண் ககர மெய்யென்றும், ஒன்றா யிருத்தலும் உயிரேறாமையும்பற்றித் தனிநிலை யெனப்பட்ட தென்றும், அறிந்து கொள்க. இனி ஆய்தவெழுத்தைத் தமிழெழுத்து களின் முன்னும் பின்னும் இட்டு, ஜ, ஷ, F.Z முதலிய பிறமொழி யெழுத்துக்களை இக்காலத்துச் சிலர் குறிப்பது. தமிழியல்பிற்கு மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதுமாகு மென்றும், பிறமொழிச் சொற்களையெல்லாம், அவ்வாறாக்கின் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிந்து கடைப்பிடிக்க. மேலும், ஆய்தவொலிக்கு அயன் மொழி யொலிகளைக் குறிக்கும் ஆற்றலில்லையென்றும், ஆய்த வரிவடி, வெழுதுவதும் அயன் மொழி வரிவடிவெழுதுவதும் ஒன்றே யென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/327&oldid=1432047" இலிருந்து மீள்விக்கப்பட்டது