பக்கம்:தேவநேயம் 1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆங்கம் பாவாணர் 309 ஆய்தம் வரும் தனிச் சொற்கள் ஆய்தச் சார்பையும் ஆய்தந் தோன்றும் வகையையும் துணைக் கொண்டு ஆய்தம் வரும் தனிச் சொற்களை ஆய்ந்து பார்ப்பின், அவற்றுட் பெரும்பாலான லகர ளகரத் திரிபாகவே போதரும், இத் திரிபு குமரிநாட்டின் ஒரு மருங்கு தோன்றியிருக்கலாம். எ.கா. அஃகு அல்குதல் = சுருங்குதல், குன்றுதல், நுணுகுதல். அல்கு - அஃகு, அஃது, இஃது, உஃது, எஃது இவை, அல் + து, இல் + து, உல் + து, எல் + து என்னும் புணர்ச்சியாகத் தோன்றுகின்றன. அன்று இன்று என்று என்னும் காலச் சுட்டு வினாச் சொற்களின் அடிகளும், அல் இல் எல் என்பனவே. இவற்றை, அல்லி இல்லி எல்லி என்னும் கன்னட இடச்சுட்டு வினாச் சொற்களொடும், அன்று (அல் + து) இன்று (இல்+து) நன்று (நல்+து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுச் சொற்களொடும், ஒப்பு நோக்குக. அல்+து = அஃது - அத்து - அது. இங்ஙனமே ஏனையவும், "அத்தொடு நின்றது அலைச்சல், கொட்டொடு நின்றது குலைச்சல்,” "எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்” என்பன பழமொழிகள். பஃது பல் + து = பஃது - பத்து - பது. பல் - பன் = பத்து. ஒ.நோ. ஆல் - ஆன், வெல் - வென். பன் + இரண்டு = பன்னிரண்டு, பன் - பான் = பத்து. இருபான் முப்பான் முதலிய எண்ணுப் பெயர்களை நோக்குக. முதன் முதலாகத் தோன்றிய ஒன்று முதற் பத்து வரைப்பட்ட எண்ணுப் பெயர்களுள், ஒன்பதிற்கு மேற்பட்ட எண்ணைப் பல என்னும் கருத்துப்பற்றிப் பல் என்னும் அடியினின்று அமைத்ததாகத் தெரிகின்றது. எஃகு இள் (- இள - இளகு) - எள் - எள்கு - எஃகு = உருக்கு. அதாவது இளகின தாது (உலோகம்). எஃகு - எஃகம் = உருக்கினாற் செய்த வேல். பஃறி பல் + F = பஃறி (பன்றி) = பன்றி வடிவான ஒருவகைப் படகு. இதில் சரக்கேற்றிச் செல்வதை இன்றும் கூவம் முதலிய ஆறுகளில் பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/326&oldid=1432046" இலிருந்து மீள்விக்கப்பட்டது