பக்கம்:தேவநேயம் 1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

308) தேவநேயம் ஆய்தம் கஃடு, கஃது, கஃபு, கஃறு என யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும், எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனக் குண சாகரரும், எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என மயிலை நாதரும் எடுத்துக்காட்டினர். இவை தனிச் சொற்கள். அஃறிணை, முஃடீது, அஃககூடிய என்பன தொடர்ச்சொற்கள். விலஃஃகி லீங்கிரு ளோட்டுமே மாத ரிவஃக்கு முத்தி னினம் என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற் பொருட்டு ஒற்றின் வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க” என்று மயிலைநாதர் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. “லௗஃகான்” (நூன்மரபு. 24} “ணனஃகான்” (நூன்மரபு. 26) எனத் தொல் காப்பியத்தில் வந்திருப்பவை உம்மைத் தொடர்களாத லின், குறிலிணைக்கீழ் வந்தனவாகா. ஆயின், “இளஃகுமே” எனச் சிந்தாமணியில் (149) வந்திருப்பது விதிக்கு மாறாதலின், இதனை யும் ஒற்றில் வழியொற்றெனவே கொள்ளல் வேண்டும். ஆய்தம் தோன்றும் வகை லகரத்திரிபு, வகரத்திரிபு, ளகரத்திரிபு, ஒற்றில் வழியொற்று, சாரியைப் புணர்ப்பு என ஆய்தம் தோன்றும் வகை ஐந்தாம். தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மணர் புலமை யோரே புள்ளிமயங்கியல் 74) என்பது லகரத்திரிபு, கஃறீது, கற்றீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி, அஃறிணை பஃறுளி என்பன உறழ்ச்சியில்லாதன. வேற்றுமை யல்வழி யாய்த மாகும் புள்ளிமயங்கியல் 84) என்பது வகரத்திரிபு. "அஃகடிய, இஃகடிய, உஃகடிய, சிறிய, தீய, பெரிய” என்பன எடுத்துக்காட்டு. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான புள்ளிமயங்கியல் 104) என்பது ளகரத்திரிபு, முஃடீது. முட்டது என்பன எடுத்துக்காட்டு, இவை உறழ்ச்சி. ஒற்றில் வழியொற்று முன்னர்க் காட்டப்பெற்றது. அஃகான், மஃகான், வஃகான் என்பன சாரியைப் புணர்ப்பு. அஃது என்பதன் குறுக்கமே அது எனத் தெரிதலின். 'செய்வஃது' என்பது 'செய்வது' என்பதன் விரித்தல் திரிபெனக் கொள்வது சரியன்று . வகரத்திரிபும் சாரியைப் புணர்ப்பும் ஒத்தியலமைபு (assimilation) என்னும் நெறிமுறை பற்றியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/325&oldid=1432045" இலிருந்து மீள்விக்கப்பட்டது