பக்கம்:தேவநேயம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 தேவநேயம் தேவநேயம் காட்டுகிறார். முன்னுரையில் மதம், சமயம் ஆகிய சொற்களின் வரலாற்றையும் மதம் தோன்றிய வகையையும் கூறி, மதங்கள் சிறு தெய்வவணக்கம், பெருந்தேவமதம், கடவுள் சமயம் என மூவகை யாதலையும், குமரிநாட்டு மதநிலையையும் பன்னிருபக்க அளவில் வரைந்துளார். நூலைக் குமரி நிலை இயல், இடைநிலை இயல், நிகழ்நிலை இயல், வருநிலை இயல், முடிபுரை இயல் என ஐந்திய லாகக் கூறுகிறார் (13-193), பின்னிணைப்பாக, தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழி பாட்டுச் சீர்திருத்தம், மதச்சமநோக்கு என்பவற்றை வைக்கிறார் (194198) தெய்வம் உண்டென்பது போன்றே இல்லை என்பதும் மதம் என்னும் பாவாணர் மதத்தை தம்பு மதம், நம்பா மதம் என இரண் டாகப் பகுக்கிறார் (3), மதம், சமயம் என்பவற்றை, “இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவ தற்குச் சமைவது சமயம்” என்னும் பாவாணர், “மதத்தினும் சமயத் திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்” என்கிறார் (3) அச்சம், முற்காப்பு, நன்றியறிவு, பாராட்டு, அன்பு, கருது கோள், அறிவுவளர்ச்சி என்பவை மதம் தோன்றுவதற்கு அடிப்படை என விளக்குகிறார் (7-10) 'கடவுள் மதமென மூவகை மதங்களுள் ஒன்றாகக் குறிப்பதன் இலக்கணத்தை,” எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமும் தூய்மையாகி, இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்து இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற ஒழுகுவது” என்கிறார் (10-11}, குமரி நிலையிலேயே தமிழர் மூவகை மத வளர்ச்சியும் பெற்றமையையும், தமிழர் மதம் ஆகிய சிவமதம், திருமால் மதம் என்பவற்றையும் விளக்கிக் கடவுள் மதத்தையும் எடுத்துக் காட்டால் விரிக்கிறார் (13-53) ஆரியத் தெய்வங்கள், ஆரியர் தமிழரை அடிமைப்படுத்திய வகைகள், ஆரியத்தால் விளைந்த கேடுகள், சிவனியர் ஆரியச் சார்பும், திருமாலியர் தமிழச் சார்பும் என்னும் நான்கு உட்பிரிவில் இடைநிலை இயலை இயக்குகிறார் பாவாணர் (59-120) ஆரியர் தமிழரை அடிமைப் படுத்தியவகையை, ஆரியர் தமிழத் தெய்வ வணக்கத்தை மேற்கொள்ளல் முதலாக கடவுட் சமய மறைப்பு ஈறாகப் பதினெண் காரணங்களைக் காட்டி விளக்குகிறார் (69-108).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/67&oldid=1431384" இலிருந்து மீள்விக்கப்பட்டது