பக்கம்:தேவநேயம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 49 96 பக்கங்களையுடைய இந்நூலின் பின்னட்டையில் இந் நூலாசிரியரின் ஏனை நூல்கள் (வெளிவர இருப்பவை) என்னும் தலைப்பில் இருபது நூல்கள் இடம் பெற்றுள. அவற்றின் பெயரை அறிதல் சில குறிப்புகளுக்கு உதவும். 1. தமிழர் குலமரபு, 2. தமிழர் மதம், 3. தமிழநாகரிகமும் பண்பாடும், 4. தமிழர் வரலாறு, 5 தமிழ் மரபு, 6. தமிழ் இயல்பும் திரிபும், 7. பழமொழி பதின்மூவாயிரம், 8. திருக்குறளும் தமிழ் மரபுரையும், 9. தொல்காப்பியம் தேவநேயம், 10. சொல்லின் செல்வம், 11. செந்தமிழ்ச் சொற்களஞ்சியம், 12. முறைச்சுவடி, 13. திருமண வரலாறு, 14. மணவாழ்க்கை , 15. மாணவர் கட்டுரை (2 பாகம்), 16. ஆங்கிலம் தமிழ் அகராதி, 17. Origin of culture or the lenurian language 18 . Dravidian Civilication, 19. Unit of Spech, 20. The Cradlo of man GT GOTLIG ) அவை. 18. தமிழர் மதம் தமிழர் மதம் 1972 இல் வெளிவந்த நூல். இந்நூல் வெளி யீட்டுக்குத் திருமுல்லைவாயில், முல்லைவாணன் பொருட்கொடை புரிந்துள்ளார். அதற்கு நன்றியாக வெண்பாக்கள் ஆறு பாடி யுள்ளார். இதன் முகவுரையில் நூல் 'தொகை' ஒரு பத்தியில் உரைத் துளார் பாவாணர்; அது,"பல் சிறு தெய்வக் கொலை வேள்வி வளர்ப்பையே மதமாகக் கடைப்பிடித்துக் கடவுள் இயல்பை அறியாத, ஆரியருள் ஒரு சிறு குழுவார் தென்னாடு வந்து, பழங்குடிப் பேதைமை, கொடைமடம், மதப்பித்தம் ஆகிய குற்றங்களைக் கொண்ட முத்தமிழ் வேந்தர் குடிகளையும், தாம் நிலத் தேவரென்றும் தம் இலக்கிய மொழி தேவமொழி என்றும் சொல்லி ஏமாற்றி வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொதுமக்களையும் அடிப்படுத்தி, தம் வேதமொழியைத் தமிழால் வளப்படுத்திச் சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைத் தோற்றுவித்து, அதில் மறை நூலும் மந்திர நூலும் உட்படப் பழந்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்தபின் மூலநூல்களையெல்லாம் ஒருங்கே அழித்துவிட்டு, தமிழர் மதங்களில் ஆரியத் தெய்வங்களைப் புகுத்தி இந்துமதம் என்னும் கலவை மதத்தை உண்டாக்கி, தமிழையும் தமிழரையும் மதத்துறையினின்று விலக்கி, சமற்கிருதத்தையே மதவியல் மொழி யாக்கி அதிற் பிராமணரே இருவகை வழிபாடும் இருவகைச் சடங்கும் நடத்தி வைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டனர். அவ்வேற் பாடே இன்றும் நடைபெற்று வருகின்றது” என்பது. கில்பர்ட்டு சிலேட்டர் என்பார் “ ஆரியர் நாகரிகத் துறையில் திரவிடராக மாறியபோது, திராவிடர் மொழித் துறையில் ஆரிய ராகத் திரிந்து விட்டனர்” என்று கூறுவதைப் பாவாணர் மேற்கோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/66&oldid=1431382" இலிருந்து மீள்விக்கப்பட்டது