பக்கம்:தேவநேயம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் வாழ்க்கை நோக்கம், வாழ்க்கை வகை, இல்லறச் சிறப்பு திருமணமும் கரணமும், மணமக்கள் பெயர், அன்பும் காதலும் என்னும் ஆறு பொருள் பற்றிய முன்னுரையொடு நூல் உள்ளது, மணவகையை உலகியற்பாகுபாடு, இலக்கணப் பாகுபாடு என்னும் இருவகையால் விளக்குகிறார். மணத்தொகை என்பதில் பன்மனைவியர் மணம் அரசர் வழிகளிலும் பின் பிறர் வழிகளிலும் இருத்தலைச் சுட்டுகிறார். மணநடைமுறை என்பதில் மணப்பேச்சு, மணவுறுதி, மணவிழா மனையறம் என்பவற்றைக் கூறும் பாவாணர், பழங்கால மணமுறையாக மகளிர் மணவினை நடத்தியதையும், ஓரிற் கூட்டிய தையும் அகப்பாடல்களைக் கொண்டு நிறுவுகிறார் (அகம் 86,136) அடுத்த பகுதியில் இடைக்கால மாறுதலாகப் பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும் தொடங்கிய வகையை உரைத்து அக்கரணத்தால் விளைந்த தீமைகள் இவையென அறு வகைக் குறைகளைக் குறிப்பிடுகிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தாழ்வு, தமிழப் பார்ப்பார்க்குப் பிழைப்பின்மை, சிறுதெய்வவழி பாடு, கற்பிழுக்கக் கூற்று, வீண்சடங்கு, கரணம் விளங்காமை என்பவை அவை. பொருந்தாமணம் வீண்சடங்கு என்பவற்றை விளக்கும் ஆசிரியர் திருமணச்சீர்திருத்தம் பற்றியும், வேண்டத்தக்க பொருத் தங்கள் இவை என்பதையும் விளக்குகிறார். மேலும் குலவெறி கொள்ளாமை, நாளும் வேளையும் பாராமை, பிறப்பியம் பாராமை, மணம் பற்றிய செய்திகளைத் திட்டமாக முடிவு செய்து கொள்ளுதல், தாய்மொழியிற் கரணம் செய்வித்தல், வீண்சடங்கு விலக்கல், செல்வநிலைக் கேற்பச் செலவு செய்தல், மணநாளன்றே மணமக்களைக் கூட்டுதல், மணமக்களின் நல்வாழ்வை விரும்பல் என்பவற்றைத் தெளிவிக்கிறார். மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டியவை, அரசியலார் கவனிக்க வேண்டியவை, புதியன புகுதல், போலிச் சீர்திருத்த மணங்கள், பெண்டிர் சமன்மை இன்னவற்றையும் எடுத்துரைக்கிறார். திருமண அழைப்பிதழ் போலிகை (மாதிரி) ஏழனைக் காட்டு கிறார். திருமண நிகழ்நிரல், தமிழ்க்கரணம், கரணத் தொடர்பான சில சீர்திருத்தங்கள், திருமண வாழ்த்திதழ் என்பவற்றையும் விளக்குகிறார். தமிழர்க்குத் தாலிகட்டும் வழக்கம் உண்மையைச் சான்றுடன் நிறுவுகிறார். மலையாள நாட்டுமணமுறை என்பதையும் சம்பந்தம் முன்னுகர்ச்சி என்பவற்றையும் குறிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/65&oldid=1431381" இலிருந்து மீள்விக்கப்பட்டது