பக்கம்:தேவநேயம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் சுருக்கம் பாவாணர் 47 தமிழர் வரலாற்றில் மிகமிக இருண்டகாலம் 15ஆம் நூற்றாண்டென்று சொல்லலாம் என்கிறார். தற்காலம் என்பதைக் கி.பி. 1600 முதல் எனக் கொள்கிறார் பாவாணர். ஆங்கிலர் வரவால் புத்தூழி தோன்றியது என்று கூறும் அவர், அனைவர்க்கும் கல்வி, அலுவல், நீதி ஒப்ப வழங்கப்பட் டதையும், தமிழ் தனிமொழி, தமிழநாகரிகம் தனி நாகரிகம்; தமிழரிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றனர் என்பவை வெளிப் பட்டதையும் சுருக்கமாகச் சொல்கிறார். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவர் பிற்பட்டவர் என மூவேந்தரையும் இறையனார் களவியல், அடியார்க்கு நல்லார் உரை என்பவற்றை மேற்கொண்டு எழுதுகிறார், திரவிடப் பிரிவு என்பது ஆறாம் பகுதி, அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம் எனத் தமிழ் திரிந்த வகையையும், தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம் > திரமிடம் > திரவிடம் எனத் திரிக்கப்பட்ட வகையையும் தெளிவிக்கிறார் இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பில், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாவகையிலும் ஆரிய திரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம் என்றும், பிராமணர் வருமுன் தமிழ்நாட்டில் முனிவர் அந்தணர் எனவும், நூல்தொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பனர் எனவும் வழங்கப்பட்டனர் என்றும் சுட்டும் பாவாணர், "ஆரியரால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர்தான் எல்லா வகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக்கொண்டு இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர். இதன் விரிவை ஒப்பியன் மொழி நூலில் கண்டு கொள்க” எனச் சுவடியை முடிக்கிறார். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழ்க நிரந்தரம் வாழிய தமிழ்த் திருநாடு! என்பது வாழ்த்து இச்சுவடியை நோக்கி, பாவாணர் பின்னே இயற்றிய தமிழ் வரலாறு, தமிழர் வரலாறுகளைக் காணும்போதுதான் பாவாணர் வளர்நிலை தெள்ளத் தெளிவாக விளங்கும். 17. தமிழர் திருமணம் சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பாவாணர் இருந்தபோது அவரால் வெளியிடப்பட்ட நூல் இது. ஆண்டு 1956. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் உருவாக்கம் பெற்றது. விலை உருபா 1. உரிமையைத் திருவாட்டியார் நேசமணி தேவநேய னுக்கு வழங்கியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/64&oldid=1431380" இலிருந்து மீள்விக்கப்பட்டது