பக்கம்:தேவநேயம் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் 16. தமிழர் சரித்திரச் சுருக்கம் 'தமிழக இளைஞர் மன்றம் திரிசிராப்பள்ளி' பதிப்புரிமை கொண்டு அடக்க விலை அணா ஒன்று என 1941இல் வெளியிட் டுள்ள து.) "பண்டித புலவ வித்துவ ஞா.தேவநேசன் இயற்றியது” என முகப்பட்டையில் நூலாசிரியர் பெயர் உள்ளது. நூல் 16 பக்கங்களை யுடையது. "சைவப்புலவர் குசுப்பிரமணியம், தலைவர், தமிழக இளைஞர் மன்றம் 33 மல்லி சாகிப் தெரு திரிசிரபுரம் 20.12.41 எனப் பதிப்புரை யில் குறிக்கப்பட்டுளது. நூலாசிரியர் "ஆராய்ச்சித் திறன் வாய்ந்தவரும் மொழி நூற் பண்புணர்ந்தாரும்” எனப் பாராட்டப் படுகிறார் பதிப்புரையில், 'கைம்மாறு கருதாது' இளைஞர் மன்றத்திற்காக எழுதித் தந்தமை யையும் சுட்டுகிறார். இதுவே மன்றத்தின் முதல் வெளியீடு நூற்பெயரில் சரித்திரம் இருப்பினும் சங்கப் பெயர் கழகம் என்றே ஆளப்பட்டுள்ளது. குமரிக் கண்டத்தில் இருந்தே தமிழர் வரலாற்றைத் தொடங்கி வரலாற்றை மீட்டெடுப்புச் செய்கிறார், கழகத்திற்கு முற்காலம், கழகக் காலம், இடைக்காலம், தற்காலம், தமிழரசர் மரபுகள் திரவிடப் பிரிவு, இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பு என்னும் பகுப்புகளைக் கொண்டது இச்சுவடி, தமிழர், ஆரியர் துருக்கியர் போல் அயல் நாட்டில் இருந்து வந்தவர் அல்லர். குமரிக் கண்டமே தமிழரின் பிறப்பிடம் என்று சொல்லி நூலைத் தொடங்குகிறார். இந்தியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா என்னும் முக்கண்டங்களையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு இந்துமாக்கடலில் இருந்த பெருநிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதைச் சுட்டுகிறார். குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களையும், ஐந்நாகரிக நிலைகளையும் இப்பகுதியிலே விளக்குகிறார். கழகக் காலம் என்பதில் இலங்கை இந்தியாவோடு இணைந் திருந்ததையும் பொருதை, இந்தியா இலங்கை ஊடு சென்றது என்பதையும் கூறுகிறார். கடைக்கழகக் காலத்திலேயே ஆரியர் தமிழில் நூல் இயற்றவும் வடசொற்களைத் தமிழில் புகுத்தவும் தொடங்கிவிட்டனர் என்கிறார். இடைக்காலம் என்னும் மூன்றாம் தலைப்பில், தமிழர் ஆரியர்க்கு முற்றிலும் அடிமையாயினர் என்றும், கல்வியை இழந்தனர் என்றும், பல்லவர் தெலுங்கர் மராட்டியர் முதலியோர் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர் என்றும் குறிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/63&oldid=1431379" இலிருந்து மீள்விக்கப்பட்டது