பக்கம்:தேவநேயம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் உணர்ந்து தம்மை உயர்த்துவதுடன் தமிழையும் உயர்த்த வேண்டுகிறார். விரிவான முன்னுரையுடைய நூல் இயனிலைப் படலம் திரிநிலைப் படலம் சிதைநிலைப் படலம் மறைநிலைப் படலம் கிளர்நிலைப் படலம் பெருநிலைப் படலம் என அறுபடலங்களைக் கொண்டுள்ளது. தமிழ் குமரிக் கண்டத்தே தோன்றியது என்பதைப் பத்தொன்பது காரணம் காட்டி நிறுவும் பாவாணர் இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் இவ்விந் நூல்களைக் கற்க என ஆங்கில நூல்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். தனிச் சொல்லாகவே மொழி தோற்ற முற்றதென்றும், மாந்தன் அமைப்பே மொழி என்றும் தமிழ்த் தோற்றப் பகுதியில் குறிக்கிறார் (69) மொழி இன்றியும் கருத்து நிகழும் என்பதைத் தெளிவிக்கிறார். முன்மைச் சுட்டினின்றே தோன்றல், முன்மை, முற்செலவு, நெருங்கல், பொருந்தல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துக்களும் இவற்றுக்கு இடைப்பட்டனவும் இவற்றிற் கிளைத்தனவுமாகிய எத்துணையோ நுண்கருத்துக்கள் பிறக்கின்றன என்பதனைக் கூறி அதனை நிறுவுவதே நூல் விரிவாக்க மாக வளர்கின்றது. திரிநிலை, சிதைநிலைகளை விளக்கிய பாவாணர், மறைநிலையைத் தமிழ் மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு தமிழின மறைப்பு, தமிழ் நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதனூல் மறைப்பு, தமிழ்த் தெய்வமறைப்பு, தமிழர் சமய மறைப்பு: தேவார மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, தமிழ்ச்சொன் மறைப்பு, தமிழ்ச் சொற்பொருள் மறைப்பு, தமிழ் எழுத்து மறைப்பு, முக்கழக மறைப்பு, தமிழ் வரலாற்று மறைப்பு எனப் பதினாறுவகை மறைப்புகளைக் கூறி விளக்குகிறார். திருவள்ளுவர் தொட்டுக் கிளர்நிலை தொடங்கியதைத் தக்க வகையில் உரைத்து, வருநிலைப் படலத்தில் உள்நாட்டில் அரசும் மக்களும் செய்ய வேண்டியவை இவை எனவும், வெளிநாட்டில் செய்ய வேண்டியவை இவை எனவும் நாற்பத்து நான்கு கருத்துகளை வைத்து நிறைவு செய்கிறார். சொல்லாக்க நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வழிகாட்டும் நூல்களுள் ஒன்று தம் தமிழ் வரலாறு என்பது பாவாணர் உரை, அம்முறையைக் கொண்டே புதுச்சொல் படைத்துக் கொள்ளமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஊகாரச் சுட்டு, தோன்றுதல், முன்மை, முற்செலவு முன்தள்ளல் நெருங்குதல் செறிதல் கூடுதல் பொருந்துதல் ஒத்தல் வளைதல் துளைத்தல் துருவுதல் ஆகிய இயல்புகளால் சொல்லாக்கம் பெறுதலை நூற்றுக் கணக்கான சொற்களை எடுத்துக் காட்டி நிறுவுதல் காட்டிக் காட்டிக் கற்பித்தல் போல்வதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/62&oldid=1431378" இலிருந்து மீள்விக்கப்பட்டது