பக்கம்:தேவநேயம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 தேவநேயம் தேவநேயம் இருவர் ஆடினால் அது, விளையாட்டு” என வேறுபாடு காட்டுகிறார் (39). "இடுக்கண் வருங்கால் நகுக” என்னும் குறளும் (14) "நாடு கண்டன்ன கணைதுஞ்சு விலங்கல்” என்னும் பதிற்றுப்பத்தும், "கிளிமரீஇய வியன் புனம்” என்னும் புறப்பாட்டும் (50) நாயும் பலகையும்" என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (136) இவ்விளை யாட்டு நூலில் மேற்கோளாதல் பாவாணர் எழுதியதால் அமைந்த பேறாம். அறியப்படாதவை என்னும் வகையில் சாழல், தெள்ளேணம் என்பவற்றைச் சுட்டும் பாவாணர், அச்சுப்பூட்டி ஆடுதல் என ராட்டிலர் அகராதி குறித்தலையும் கூறுகிறார். இவற்றுக்கு விளக்கம் இல்லை . சாழலும் தெள்ளேணமும் மகளிர் பாடி ஆடுவதாக மணிவாச கர் குறித்தார், சாழல் ஒருவர் கூற்றை ஒருவர் மறுத்துரைத்தல், "அவரை அவர் சாடு சாடு எனச் சாடிவிட்டார்” என்னும் வழக்கில் வரும் சாடல் சாழலை நினைவூட்டுதல் காண்க. தெள்ளுதல் நாவுதல் புடைத்தல் கொழித்தல் முதலியன அரிசி ஆக்கும் மகளிர் முறச் செயல்கள் ஆகும். குறுநொய்யையும் மணியையும் பிரிக்கத் தெள்ளுவர். தெள்ளுங்கால் முறத்தின் முகப்பு மேலே தூக்கியிருக்கும். அஃது ஏணம் (உயர்வு) ஆகும். பாடிச் செய்யும் செயல் ஆடலாக எண்ணப்பட்டது போலும். இலக்கிய வாழ்வு பெற்ற புனல் விளையாட்டும் பொழில் விளையாட்டும் பண்டை விளையாட்டு விழாக்களாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ் என்பது ஆடல் பாடல் பண்பாடு ஆகிய எல்லாமும் தழுவிய பொருளது என்பதை அறியச் செய்கிறார் பாவாணர். 15. தமிழ் வரலாறு 1967 இல் தமிழ் வரலாறு வெளிவந்தது. பாவாணர் காட்டுப் பாடியில் உறைந்த காலம்; திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவினர் உதவி கொண்டு வெளியிட்டது. தாம் இயற்றிய தமிழ் வரலாற்றின் தன்மையை முகவுரையில் பாவாணர் குறிப்பிடுகிறார். | "தமிழ் வரலாறு என்னும் பெயரில் இதுவரை வெளிவந்தவை யெல்லாம், பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாறும் மொழி பற்றிய பொதுவான செய்திகளை எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும் மொழி நூலையும் தழுவி முதன் முதலாக வெளிவரும் தமிழ்மொழி வரலாறு இதுவே” என்பது அது. ஆர்வலர் இந்நூலைக் கருத்தூன்றிக் கற்றுச் செந்தமிழின் உயர் தனிச் செம்மையையும், குமரிக் கண்டத் தமிழரின் கூர்மதியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/61&oldid=1431377" இலிருந்து மீள்விக்கப்பட்டது