பக்கம்:தேவநேயம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 43 முழுகுதல் என்னும் மூன்றும் இருபொழுதாட்டு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, என் உலக்கை குத்துக் குத்து, ஊதாமணி, பூப்பறித்து வருகிறோம், தண்ணீர் சேந்துகிறது என்னும் ஐந்தும் காட்டுகிறார். இருபாற் பகுதிப் பகலாட்டு பண்ணாங்குழி, பாண்டி கம்ப விளையாட்டு, கச்சக்காய்ச்சில்லி, குஞ்சு என்பனவும் இரவாட்டு கண்ணாம்பொத்தி, புகையிலைக் கட்டை யுருட்டல், புகையிலைக் கட்டையெடுத்தல், பூச்சி, அரசனும் தோட்டமும், குலைகுலையாய் முந்திரிக்காய் என்பனவும், இருபொழுதாட்டு தொண்டி நின்றால் பிடித்துக்கொள், பருப்புச் சட்டி, மோதிரம் வைத்தல், புலியும் ஆடும், இதென்ன மூட்டை கும்மி என்பனவும் கூறப்படுகின்றன. இவ்வாறே குழந்தைப் பக்கம், பெரியோர் பக்கம் என்பனவும் சொல்லப்படுகின்றன. விளையாட்டே எனினும் பருவம், நேரம், இடம் என்பன கொண்டு வகுத்துக் காட்டும் முறை சிறக்க அமைந்துள்ளது. ஒவ்வோராட்டமும் இன்ன நாட்டு அல்லது வட்டாரத்து முறை என்றும் ஒரே ஆட்டம் பல்வேறு வகையாய் ஆடப்படின் அவை ஆடும் வகையும் வட்டாரமும் இவை என்றும் சுட்டப்படுகின்றன. ஆட்டத்தில் தாமே புகுந்து விளையாடும் ஆட்டக்காரராகத் தம்மைக் கொண்டே இதனை எழுதினார் என்பது ஆடல் முறையைச் சொல்லும் வகையால் புலப்படுகின்றது. ஆட்டின் பெயர், ஆடுவார் தொகை, ஆடுகருவி, ஆடிடம், ஆடுமுறை, ஆட்டுத் தோற்றம் என்னும் இவ்வுட்பகுப்பே பாவாணர் இவ்விளையாட்டுகளில் எவ்வாறு ஊன்றுதலுடன் எழுதினார் என்பதை விளக்கும். நூலின் முன்னுரையில் கட்சி பிரித்தல், தொடங்கும் கட்சியைத் துணிதல், இடைநிறுத்தல், தோல்வித் தண்டனை, ஆடைதொடல் கணக்கன்மை, தவற்றால் ஆடகர் மாறல், வென்றவர்க்கு மறு ஆட்டவசதி, இடத்திற்கு ஏற்ப வேறுபடல், ஆட்டைத் தொகை வரம்பின்மை, நடுநிலை என்னும் பதின்வகை விளக்கங்களை எழுதுதல், ஆடுமுறை பற்றிய ஐயம் அகற்றும் அருமையதாம். பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும், சோழநாட்டுக் கில்லித் தண்டும், கிட்டிப்புள் என்பதொன்றும் மூன்றும் ஒன்றாதலையும், கிரிக்கட்டு ஆட்டத்தொடு உவமை காட்டுதலையும் படிக்கும்போது பாவாணர் இளந்தைப் பருவம் இவற்றில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதே புலப்படுகின்றது. ஏனெனில், அவ்வரலாறு அவரால் கூறப்பட்டிலது; எழுதப்படவும் இல்லை ஆதலால் (24-24), "ஒருவன் ஆடினால் பட்டம், அது பொழுது போக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/60&oldid=1431376" இலிருந்து மீள்விக்கப்பட்டது