பக்கம்:தேவநேயம் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 தேவநேயம் தேவநேயம் இதனால்," விளையாட்டு பொருட்டாக எண்ணக் கூடிய தன்று” என்பது கருத்தாம். இருவர் இகலுதல் போர், சண்டை எனப்படும் ஆனால், விளையாட்டுச் சண்டை மக்களிடத்தேயன்றி பறவை விலங்கு முதலியவற்றுள்ளும் உள்ளமை கருதத் தக்கது. ஒருநாட்டின் பண்பாடு, நாகரிகம், கலைத்திறம் என்பனவும் விளையாட்டால் புலப்படும். நம் மண்ணின் வளம் விளையாட்டு களாலும் புலப்படும் என்பதால் அதனைக் காக்கக் கருதிய பாவாணர் தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என எழுதினார். செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகளாக வந்து 1962இல் கழக வெளியீடு 752 ஆக நூலாக்கம் பெற்றது. நூலின் பக்கங்கள் 144. ஆண்பாற் பகுதி, பெண்பாற் பகுதி, இருபாற்பகுதி என முப்பகுதிகளைக் கொண்ட இது, பகலாட்டு, இரவாட்டு, இருபொழுதாட்டு என்பவற்றுடன் வழக்கற்ற விளை யாட்டுக்கள், பள்ளிக்கூட விளையாட்டுக்கள், பண்டை விளை யாட்டு விழாக்கள் என்னும் பின்னிணைப்பையும் கொண்டது. "விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு, விளை = விருப்பு, ஆட்டு = ஆட்டம். விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக் கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத் திறம் வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, 'கரும்பு தின்னக் கூலி போல்' விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. இவை - பாவாணர் முகவுரையில் சில குறிப்புகள், இளைஞர் பக்கம் என்பது 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் ஆட்டம் என வரையறை செய்கிறார். அதில் பகலாட்டு எனக் கோலி, தெல், சில்லாங்குச்சு, பந்து, மரக்குரங்கு, "காயா பழமா?” பஞ்சு வெட்டுங் கம்படோ, குச்சு விளையாட்டு பம்பரம், பட்டம் எனப் பத்தையும், இரவாட்டு எனக் குதிரைக்குக் காணங்கட்டல், வண்ணான்தாழி, சூ விளையாட்டு என மூன்றையும், இருபொழுதாட்டு எனக் கிளித்திட்டு பாரிக்கோடு அணிற் பிள்ளை, சடுகுடு, கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை , பூக்குதிரை, பச்சைக் குதிரை, குதிரைச் சில்லி, என எட்டையும் எழுதுகிறார். இவை ஆண்பாற் பகுதி, பெண்பாற் பகுதிப் பகலாட்டு தட்டாங்கல், கிச்சுக் கிச்சுத் தம்பலம், குறிஞ்சி (குஞ்சி) என்னும் மூன்றும், இரவாட்டு பாக்குவெட்டியைக் காணோமே, நிலாக் குப்பல், பன்னீர்க்குளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/59&oldid=1431375" இலிருந்து மீள்விக்கப்பட்டது