பக்கம்:தேவநேயம் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் தன்மை கெட்டு விடும்” என மொழிக் காவல் கடனைக் குறிப் பிடுகிறார். மேலும், சிலர் கார் பஸ் ரோடு முதலிய ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்து விட்டதனால் அவற்றை விலக்குதல் கூடாது என்பர். அவர் அறியார். அவை இன்னும் தமிழிற் கலக்கவில்லை . - உயர்ந்த புலவர் வழக்கு நோக்கியே ஒரு மொழியின் இயல்பை அறிதல் வேண்டும். மொழி திருந்தாதார் வழங்கும் கார், பஸ் முதலிய சொற்களைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வது, கீழ்மக்களின் ஐம்பெருங் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக் கொள்வது போன்றதே” என்கிறார். இவ்வாறு தெளிவிக்கும் பாவாணர் இக்கட்டுரையின் தொகுப்பாக நிறைவுரை வரைந்துள்ளார். "பிறரிடம் கடன் கொள்ள வேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு, பிர்லா முதலிய பெருஞ்செல்வர் போல், தமிழும் பிறமொழிகளின்று சொல்லைக் கடன் கொள்ளா தென்றும், அயற் சொற்களையெல்லாம் இயன்றவரை மொழிபெயர்த்தல் வேண்டும் என்றும், மொழி பெயர்க்க முடியாதவற்றிற்குப் புதுச்சொற்களைப் புனைந்து கோடல் வேண்டும் என்றும், அதுவும் இயலாத ஒரு சில இன்றியமையாத சொற்களைத் தமிழ் எழுத்திற் கேற்பத் திரித்து வழங்குதல் வேண்டும் என்றும், பிறமொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளம்படுத்தத் தலைசிறந்த வழி என்றும், பிறமொழிச் சொற்களைக் கட்டுமட்டு இன்றித் தமிழில் கலப்பது அதன் கேட்டிற்கே வழிகோல்வதாகும் என்றும், இதுவரை தமிழிற் புகுத்தப்பட்ட எல்லாச் சொற்களும் தமிழதிகாரி களால் ஒப்புக் கொள்ளப்பட்டன அல்ல என்றும், அவற்றை இயன்றவரை விலக்கித் தமிழின் தூய்மையைக் காப்பது தமிழறிஞர் களின் தலையாய கடன் என்றும், நேர்நின்று காக்கை வெளி தென்பாரும் தாய்க்கொலை சால்புடைத்தென்பாரும் தமிழை ஒழிக்கத் தயங்கார் ஆதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற்றென்றே கொள்ளுதல் வேண்டும் என்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க” என முடிக்கிறார். சுருங்கிய, எளிய இனிய மொழிக் காவல் சுவடி "தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?” என்பது. 14. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ஒரு சொல்லைச் சொல்லி ஒருவரை வருந்தச் செய்த ஒருவர், "நான் விளையாட்டாகச் சொன்னதை இப்படி வினையமாக எடுத்துக் கொண்டாயே" என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/58&oldid=1431360" இலிருந்து மீள்விக்கப்பட்டது