பக்கம்:தேவநேயம் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 தேவநேயம் தேவநேயம் பாளர் மு.தமிழ்க்குடிமகனார் தம் முன்னுரையில் குறிப்பிடல் நூற் சுருக்கமாம். 'தமிழில் புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற் சொற்க ளெல்லாம் அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமாய் இருந்தவையே” "தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற் கென்றே புகுத்தப் பட்டவையாம். இது, ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்வதற்கு ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டிமேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே" - இவை ஆழமான செய்திகள். சன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல். இதன் வரவால் பலகணி, சாளரம், காலதர், காற்றுவாரி என்னும் நாற்பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கில் இருந்து ஒழிந்தன அல்லவா! அடுக்களை, அட்டில், ஆக்குப்புரை, சமையலறை, மடைப் பள்ளி முதலிய சொற்கள் எப்படி வழக்கு வீழ்ந்தன? குசினி என்னும் பிரஞ்சுச் சொல்லும் கிச்சன் என்னும் ஆங்கிலச் சொல்லும் புகுந்ததால்தானே. "முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவதுபோல், முன்னோர் ஆக்கிய மொழியை வளப்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும். இங்கனம் செய்யாது பிறமொழிச் சொற்களையே வேண்டாது கடன் கொள்பவர், தாமும் தேடாது முன்னோர் தேட்டையும் கடனால் இழக்கும் முழுச் சோம்பேறியே யாவர்" என்கிறார் பாவாணர். பொதுச் சொற்களே அல்லாமல் ஊர்ப்பெயர் தெய்வப்பெயர் முதலியவற்றுக்கும் வடசொற்கள் புகுத்தப்பட்டதையும் எளிய சொற்களும் பெருவழக்குச் சொற்களும் இருப்பவும் கடிய சொற்களும் வழங்கற்கரிய சொற்களும் புகுத்தப்பட்டதையும் எடுத்துக் காட்டுடன் விளக்குகிறார். உருதுச்சொல், ஆங்கிலச் சொல் கலப்பின் கேட்டையும் சான்று காட்டி நிறுவுகிறார். இச்சிறு சுவடியில் ஏறத்தாழ 300 வேற்றுச் சொற்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கேற்ற தமிழ்ச் சொற்களையும் சுட்டுகிறார். வேற்றுச் சொற்களின் வேண்டாத் தன்மையைப் புரிந்து கொள்ள வைக்கிறார். புதுச் சொற் புனைந்தும் நேர் தென் சொல் அமைக்க இயலாத ஒரு சில அயற் சொற்களை அங்ஙனமே ஆளலாம். ஆயின் அவற்றை அயன் மொழி ஒலிப்படி வழங்காது தமிழ் ஒலிக்கு ஏற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். அல்லாக்கால் வேற்றொலி விரவித் தமிழ்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/57&oldid=1431359" இலிருந்து மீள்விக்கப்பட்டது