பக்கம்:தேவநேயம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் இக்காலம் மூன்றாம் பகுதியில் செய்யுள் உரைநடை இலக்கி யம், ஆங்கிலராட்சியால் விளைந்த நன்மைகள், அல்பிராமணர் கட்சி, தமிழாரியப் போராட்டம், தனித்தமிழ் இயக்கம், பேராயக் கட்சியால் விளைந்த தீங்கு, பெரியார் தன்மான இயக்கம், தமிழர் ஆட்சித் தொடக்கம், இற்றைத்தமிழர் நிலைமை, தமிழுக்கு ஆகாத நூல்கள் என்பவற்றை விளக்குகிறார் (225-286). எதிர்காலம் என்னும் நிறைவுப் பகுதியில் தமிழின் தலைமை, தமிழ்விடுதலையே தமிழினவிடுதலை, தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல், தமிழர் ஒற்றுமை, வரிசையறிதல், இந்து மதத்தினின்று தமிழ மதத்தைப் பிரித்தல், வண்ணனை மொழி நூல் விலக்கு, இந்தி எதிர்ப்பு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி எனப் பதின் பிரிவுகளில் வரைகின்றார். பின்னிணைப்பை ஐந்தாம் பகுதியாக்கி புரட்சி இலக்கியப் பாகுபாடு, மொழி பற்றிய சிலவுண்மைகள் தமிழ் எழுத்து மாற்றம், பகுத்தறிவு விளக்கம் தமிழ் திராவிட வேறுபாடு, உலகத் தமிழ் மாநாடுகள் என்பவற்றை உரைக்கின்றார். எழுத்து மாற்றத்தால் தமிழன் முன்னேற முடியாது, ஈகார வடிவை இகரத்தின் மேல் சுழித்தல், ஒளகார வடிவின் உறுப்பான 'ள' என்னும் குறியைச் சிறிதாக எழுதுதல் என்னும் இரண்டே தமிழுக்கு வேண்டும். கூ. என்பதற்குக் குகரத்தின் மேற்சுழிக்கலாம் என்று விலக்களிக்கிறார்.) பகுத்தறிவின் பயன் குலப்பட்டங்களை விடுத்துப் பகுத்தறிவு ஒழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் என்கிறார். பிற இலக்கிய வரலாறுகளில் காணவியலா விரிவில் குமரிக்கண்ட ஆய்வு கொண்டது பாவாணர், இலக்கிய வரலாறே. 13. தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? இச்சிறு சுவடி முடிக்கல (கிரௌன்) அளவில் 21 பக்க அமைவில் முதல் உத.க. மாநாட்டில் (1969) வெளியிடப்பட்டது. ஆனால் அது, தென்மொழி மாதிகையில் (1959) வெளிவந்த ஒரு கட்டுரையேயாகும். உ.த.க. உயிர்க்கொள்கை தனித்தமிழ் என்பதால் தொண் டர்கள் கைக்கொள்ளும் காப்பு நூலாக மாநாட்டில் 35 காசு விலையில் வெளியிடப்பட்டது. மாநாடு நிகழ்விடம் பறம்புக்குடி. "பாவாணர் இந்த நூலில் கடன்கோடல் தன்மைகளையும் சொற்கடன் கொள்வது தமிழைப் பொறுத்த வரையில் எவ்வளவு பெரிய கேட்டினை விளைக்கும் என்பதையும் மிகப் பல எடுத்துக் காட்டுகளால் நிறுவியுள்ளார்” என்று முகவை மாவட்ட அமைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/56&oldid=1431358" இலிருந்து மீள்விக்கப்பட்டது