பக்கம்:தேவநேயம் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் கொள்ளார் ஒருவகைப் பெற்றியும் ஒல்லார் என்று மெய்ப் பெற்றியர் இலக்கணம் வகுக்கிறார் (94-95) இரண்டன்மை அல்லது ஓராதன் கொள்கையை, “இரு பொருளுக்கு இடைப்பட்ட உறவு, ஒருமை இருமை சிறப் பொருமை என மூவகையாகத் தான் இருக்க முடியும். கதிரவனும் வெயிலும் போன்றது ஒருமை; கதிரவனும் கலங்கரை விளக்கமும் போன்றது இருமை; கதிரொளியும் நிலவொளியும் போன்றது சிறப்பொருமை. இறைவனுக்கும் ஆதனுக்கும் (ஆன்மாவிற்கும்) இடைப்பட்ட உறவு சிறப்பொருமையாகத்தான் இருக்கமுடியும். அதுவே இயற்கைக்கும் உத்திக்கும் ஒத்தது” என்று கூறும் பாவாணர், ஒவ்வாத் தன்மையையும் விளக்குகிறார். "இறைவனும் ஆதனும் ஒரே பொருளாயின் ஆதன் இறைவ னால் இன்பம் நுகர இடமில்லை . மேலும் அமலனாகிய இறைவனும் மலனாகிய ஆதனும் ஒளியும் இருளும் போல வேறுபட்டிருப்பதால் ஒரே பொருளாய் இருத்தல் இயலாது. இறைவனும் ஆதனும் முற்றும் தொடர்பற்ற இருவேறு பொருளாயின், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கும் எல்லாம்வன்மைக்கும் இழுக்காகும். ஆதலால், இருநிலைமைக்கும் இடைப்பட்டு ஒட்டியும் ஒட்டா மலும் இருக்கும் சிறப்பொருமையே இறையாதன் உறவாம். இது இயற்கைக்கும் உத்திக்கும் முற்றும் ஒத்திருப்பதால் இதுவே தொன்றுதொட்டுத் தமிழர் கொள்கையாயிற்று இதிற் கருத்து வேறுபாடின்மையால் இதுபற்றிய ஆராய்ச்சியும் என்றேனும் எழுந்ததில்லை” என உறுதி செய்கிறார் (114). “புத்தமதம் கடவுள் கொள்கை இன்மையால் தம்பா மதத்தின் பாற்படும்” என்கிறார் (131). பொது இலக்கியப் பகுதியில் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு ஆகிய 36 நூல்களைப் பற்றியும் பன்னிரு பக்கங்களே வரைந்துள்ளார் பாவாணர் (150-162) நிகண்டு என்னும் நூல்வகையை 'உரிச்சொல் சுவடி' என்கிறார் (163), "தொல்காப்பியர் ஆரிய இனத்தார்” என்கிறார் பாவாணர் (133), புறத்திரட்டு பாவாணர் பார்வைக்குக் கிட்டவில்லை போலும். அதனால் இன்றில்லை என்கிறார் (174) பல நூல்களுக்கு ஆசிரியர் பெயர் சுட்டிய அளவில் அமைகிறார். ஆரியப்பூசாரியரை முற்றிலும் நம்பி மூவேந்தரும் அடிமைப் பட்டுப் போனதை விரிவாக வரைந்துளார் (179-223),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/55&oldid=1431357" இலிருந்து மீள்விக்கப்பட்டது