பக்கம்:தேவநேயம் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 31 பாவாணர், 'இலக்கிய வரலாறு எழுதத் தக்கார் எவர் என வரைந்துள்ளது, அவர் வரைந்த இலக்கிய வரலாற்று அடிப் படையை வெளிப்படுத்தும். அது, "தமிழ் வேர்ச்சொல் ஆராய்ச்சியும் பிராமணீயத்தையும் இந்தித் திணிப்பையும் எதிர்க்கும் நெஞ்சுரமும், உள்ளவரேயன்றி, அவை இல்லாது தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகள், எத்துணை இலக்கியம் கற்றும், பண்டாரகர் பட்டம் பெற்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியும் தமிழ்வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் எழுத எட்டுணையும் தகுதியுள்ளவர் ஆகார் என்பது திண்ணம்" என்பது. குமரிநாடே பழம்பாண்டிநாடு, பழம் பாண்டிநாடே செந் தமிழ்நாடு, முக்கழகவுண்மை , தலைக்கழகம், இடைக்கழகம் என ஐம்பகுப்பில் தலைக்காலத்தை வரைந்து, “முதலிருகழகமும் முற்றும் ஆரியத் தொடர்பு அற்றன என்று அறியல் வேண்டும்” என முடிக்கிறார். | ஆரியர் குடியமர்வுக்காலம், இடைக்கால இலக்கியம் மூவேந்தர் குடியுஞ் செய்த இனமொழிக்கேடு, சமற்கிருத இலக்கிய வளர்ச்சியும் தமிழிலக்கியத் தளர்ச்சியும், ஆரியத்தால் ஏற்பட்ட இலக்கண இலக்கிய மாற்றமும் கேடும், இறந்துபட்ட தமிழ் நூல்கள், ஆங்கிலச் சார்புக் காலம் என ஏழு பகுப்பில் இடைக் காலத்தை நிறைவு செய்கிறார். இடைக்கால இலக்கியங்களை மதவிலக்கியம், பொது விலக்கியம் என இரண்டாக்கி எழுதுகிறார். மதவிலக்கியங்களைச் சிவனிய இலக்கியம், மாலிய இலக்கியம், கடவுள்மத இலக்கியம், இரண்டன்மை அல்லது ஓராதன்மை இலக்கியம், சமண இலக்கியம், புத்த இலக்கியம், கிறித்தவ இலக்கியம், இசுலாமிய இலக்கியம், நம்பாமத இலக்கியம் என ஒன்பான் வகுப்புகளில் ஆய்ந்தெழுதுகிறார். இவற்றுள் கடவுள் மதம், ஓராதன்மை மதம், நம்பா மதம் என்னும் அமைப்புகள் பாவாணக் கொடையாகும். "காலம், இடம், பெயர், தோற்றம், தோற்றரவு, இயல்வரை யறை முதலிய வரம்பீடின்றி ஒன்றாய் நிற்றமாய்த் திரிபின்றி எங்கும் நிறைந்திருக்கும் கருத்துப் பொருளாய், இயல்பாகவே எல்லா அறிவும் எல்லா வல்லமையும் கொண்டு மனம் மொழி மெய்யாகிய முக்கரணமும் கடந்து நிற்கும் முழுமுதல் இறைவனான அறவாழி அந்தணனே கடவுள்; அம்மதத்தினர் பெற்றியர் என்னும் சித்தர்" என்கிறார் பாவாணர். “அணிமா முதலாக எண்சித்திகளை வகுத்துக் கூறிய மட்டில் அவர் பெற்றியர் ஆகார். பிறப்பில் ஏற்றத்தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் தூய்மையும் இல்லார், உலகத் துறவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/54&oldid=1431356" இலிருந்து மீள்விக்கப்பட்டது