பக்கம்:தேவநேயம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் "வழக்கற்ற சொற்களையெல்லாம் ஒரு தனிச் சுவடியாக வெளியிட இந்நூலாசிரியன் கருதுதலின், ஈண்டு மிக வேண்டிய சொற்களே காட்டப் பெறும்” என்பதால் இது புலப்படும். "இது காறுங் கூறியவற்றால், தமிழ் சொல் வளமுடைய தென்றும், தமிழர் மதிவளமுடையர் என்றும், தமிழ்நாடு பொருள் வளமுடைய தென்றும் தெள்ளிதின் விளங்கும் என்று தமிழ்ச் சொல் வளத்தில் எழுதுவது நூல் வளத்தையெல்லாம் திரட்டி வைத்த முடிவினதாகும் (73). 12. தமிழ் இலக்கிய வரலாறு நேசமணி பதிப்பக வெளியீடாக 1979இல் வெளிவந்த இந்நூல், “ என் தந்தையார் ஓர் அரசினர் அலுவலராயிருப்பதால் இதைத் தாமாக வெளியிட இயலவில்லை. ஆதலால், நான் இதை வெளியிடுகிறேன்” என்று பாவாணர் இளைய மகன் தே.மணியால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது, இதற்கு முழுவதாகப் பொருளுதவி புரிந்தவர் சிங்கபுரித் தமிழரும் சீரிய தனித்தமிழ் அன்பரும் ஆகிய கோவலங்கண்ணனார். பாவாணர் தம் ஆழிய நன்றியால் நன்றியுரை அன்றிக் கோவலங்கண்ணனார் மேல் 'பாடாண் பதிகம்' ஒன்றும் பாடி முற்பட இணைத்துள்ளார். நன்றியுரை அகவலில், 'மொழி நூல் மாணவன் முதுதேவ நேயன்' எனத் தம்மைச் சுட்டுதல் எண்பான் அகவைகாறும் மெய்ப்பிக்கப்பட்ட வாழ்வு மெய்ம்மமாம். மற்றை எந்நூலிலும் இடம் பெறாவகையில், 'தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப்பட்டி' ஒன்று நூன்முகப் பில் இணைக்கப்பட்டுள்ளது. முன்னுரை 64 பக்கங்களில் இயல்கின்றது. மறைந்த குமரிக் கண்டம், குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம், குமரிநாடே தமிழன் பிறந்தகம், குமரிக்கண்டப் பரப்பு, குமரிக் கண்டத் தமிழ், குமரி தாட்டுத் தமிழர், குமரி நாட்டு நாகரிகம், குமரிநாட்டு இலக்கியம், தமிழர் பரவல், ஆரியர் திரும்பல் எனப் பதின் தலைப்புகளில் முன்னுரை ஆய்வை நிகழ்த்தி நூலுள் புகுகிறார். நூல், பின்னிணைப்பொடு 327 பக்கங்களில் செல்கின்றது. அந்தாள் அதன் விலை, உருபா பன்னிரண்டு, பாவாணர் மகனார் மணியின் தென்குமரி அச்சகத்தில் பதிப்பிக்கப் பட்ட நூல் இது. நூல், தலைக்காலம் இடைக்காலம் இக்காலம் எதிர்காலம் என நாற்கால வைப்பில் பின்னிணைப்பு என்னும் சேர்ப்பொடு ஐம்பகுதிகளாய் அமைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/53&oldid=1431354" இலிருந்து மீள்விக்கப்பட்டது