பக்கம்:தேவநேயம் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் சொல்லிலே வரலாறு அமைந்து கிடத்தலைப் பல சான்று களால் நிறுவுகிறார் பாவாணர். அவற்றுள் ஒன்று சம்பளம். கூலம் தந்து வாங்கிய வேலை கூலி. கூலத்தில் சிறந்தது சம்பு ஆகிய சம்பா நெல். சுவையில் உயர்ந்தது அளம் ஆகிய உப்பு. சம்பும் அளமும் வழங்கி வேலை வாங்கிய வழக்கைக் காட்டும் வரலாற்றுச் சொல் சம்பளம் என்பது நம்மை தயந்து பாராட்ட வைக்கும். அதற்கும் மேல் 'Salary' என்னும் ஆங்கிலச் சொல்லும் அப்பொருள் காட்டுதலைக் காட்டும் போது வியப்பே ஆகின்றது. உயிர், மெய், உயிர்மெய் முதலிய இலக்கணக் குறியீடுகளைக் காட்டி மெய்ப்பொருட் சொற்கள் எனப் பெயர் சூட்டுச் செய்கிறார். ஒருபொருட் பல சொற்களுக்கு அறுபது எடுத்துக் காட்டுகள் காட்டுகிறார். நுண்சிறு பொருள் வேறுபாடுகளை எளிதில் விளக்கிச் செல்கிறார். ஒரோ ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம்: கண்ணி- இருவிரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை. தார் - கட்டியமாலை தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை கதம்பம் அல்லது கத்திகை - பலவகைப் பூக்களால் தொடுத்த மாலை படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை தெரியல் - தெரிந்தெடுத்த மலராலாய மாலை அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை தொடலை - தொடுத்த மாலை பிணையல் - பின்னிய மாலை கோவை - கோத்த மாலை கோதை - கொண்டை மாலை சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை சூட்டு - நெற்றி மாலை ஆரம் - முத்துமாலை தமிழ்ச் சொல்வளம் என்பது ஐந்தாம் கட்டுரை. அதில் வித்துவகை முதலாகக் காட்டுவகை ஈறாக 38 வகைகளைக் காட்டுகிறார். அதன்மேல் பலபொருள் ஒருசொற்கள், வழக்கற்ற சொற்கள், பொருள் திரி சொற்கள், ஒழுக்கவியற் சொற்கள், சொற்குடும்பமும் குலமும் எனத் தனித்தனி நூலாக விரிவனவற்றைக் கட்டுரையாய் வடிக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/52&oldid=1431353" இலிருந்து மீள்விக்கப்பட்டது