பக்கம்:தேவநேயம் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் "எல்லா மொழிகளும் இயற்கையாய் எழுந்தவை என்றும், கடவுளைப் போல் தொடக்கமற்றவை என்றும், ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவை என்றும், சிலமொழிகள் தேவமொழி என்றும், தேவமொழியில் வழிபாட்டை நடத்துவது கடவுட்கு உகந்தது என்றும், தமிழ் வடமொழியினின்று வந்தது அல்லது அதனால் வளம் பெற்றது என்றும் பல பேதைமைக் கருத்துக்கள் பல தமிழர் உள்ளத்தில் வேரூன்றியிருப்பதால் அவற்றைப் பெயர்த்து அவர்களை மொழி நூற் கல்விக்குப் பண்படுத்தும் வண்ணம் இச்சொல்லாராய்ச்சி நூல் வெளிவருகின்றது” என்கிறார். இந்நூலின் அமைதியை, “ஆங்கிலத்தில் திரெஞ்சுக் கண்காணியார் (Trench) எழுதியுள்ள சொற்படிப்பு (On the study of words) என்னும் கட்டுரைத் தொகுதியின் போக்கைத் தழுவி எழுதப் பெற்றவை” என்கிறார். சுருங்கிய வகையால் நூல், நூற்பொருள், அதன் தேவை, நூலாக்க வகை, ஆக்க உதவி என்பவற்றைச் செய்நேர்த்திச் செம்மணி மாலையெனக் கொண்டது சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளின் முகவுரை. முகவுரை இவ்வகைத் தெனின் நூல் தகவுரையும் இவ்வகைத் தேயாம் என்பதை அணியியற் சொற்கள் என்பது தொடங்கி சொற் குடும்பமும் குலமும் என்னும் நிறைவுக் கட்டுரை ஈறாக அமைந்த நூற்றிருபது பக்கங்களின் ஒவ்வொரு பக்கமும் இத்தகைத்தேயாம். "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்பது தொல்காப்பியம். அதன் துலக்கமும் விளக்கமும் அறிய மலைமேல் விளக்காக வாய்த்தவை பாவாணர் நூல்கள். அவற்றுள் ஒன்றே ஒன்றைக் கற்று உண்மை உணர வேண்டும் என்னின் சொல் லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் இச்சுவடி சாலும். அத்தகு எளிமையும் விளக்கமும் வெளிப்பாடும் அமைந்த நூல் அது. செய்யுட்கு அழகும் பொருள் விளக்கமாம் அணி உரை நடைக்கும் உரியதே என்றும், ஒரு தொடர்க்குரிய அணி நயம் ஒரு சொல்லளவிலும் ஆவதே என்றும் அணியியற் சொற்களில் நாட்டுகிறார். வித்தும் வேரும் அடியும் கிளையும் குச்சும் கொழுந்துமாகத் தொடர்ந்தோங்கும் மரம்போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத்தொடர்ச்சி மரபு என்றும், தொடர்ந்து வரும் பழக்க வழக்கங் களையும் சொல்வழக்காற்றையும் மரபு என்றும் தொல்காப்பிய மரபியல் இப்பொருள் பற்றியதே என்றும் மரபு பொருள் பொதி சொல்லாகிப் பண்டுதொட்டு இன்றுவரை இயல்வகையை நிறுவும் மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/51&oldid=1431352" இலிருந்து மீள்விக்கப்பட்டது