பக்கம்:தேவநேயம் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் சொற்களின் வேறுபாடு காட்டாமை, எதிர்ச்சொற்களின் வேறுபாடு காட்டாமை, எடுத்துக் காட்டின்மை, கூறியது கூறல், எனப் பதினொருவகை காட்டுகிறார். வேர் வழுக்கள் என்னும் பகுதியில் தென்சொல்லை வடசொல் லாகக் காட்டல், சொல்வேர் காட்டாமை, வழுவேர் காட்டல், ஐயுற்றுக் கூறல், தலைமாற்றிக் கூறல், கூட்டுச் சொல்லை வழுப்படப் பிரித்தல், ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல், பலசொல்லை ஒரு சொல்லாகக் காட்டல், தொழிற் பெயரின் திரிபே முதனிலை எனல், என்பவற்றை விளக்குகிறார். இவ்வாறு பிற வழுக்களையும் குறிப்பிடும் பாவாணர், "சென்னைப் பல்கலைக்கழகம் அது வெளியிட்ட அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப்பல்கலைக் கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும்” என முடிக்கிறார். தமிழுக்கெனத் தனிப்பல்கலைக் கழகம் தோன்றினால் அது நிறைவேறும் என்னும் அவர் நம்பிக்கை 1961இல் ஏற்பட்டுளது. பல்கலைக் கழகம் தோன்றினாலும் நிறைவேற வழி... 11. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் சேலம் கல்லூரியில் பாவாணர் பணிசெய்த நாளில் வெளிப் பட்ட நூல் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்பது. ஆண்டு 1949, "என்னைப் பல்லாற்றானும் ஊக்கி இந்நூல் விரைந்து இயல்வதற்குக் காரணமாயிருந்த சேலம் நகராண்மைக் கல்லூரித் தலைவர் திரு. அ. இராமசாமிக் கவுண்ட ர், எம்.ஏ. எல்.டி, அவர்கட்கு யான் என்றுங் கடப்பாடுடையன்” என முகவுரையில் வரைந்துள்ளார். தம் பெயரை “ஞா.தே.” எனச் சுருக்கியுள்ளார். கழகத்தின் 484ஆம் வெளியீடாக வந்தது இந்நூல். ஒருபக்க அளவில் முகவுரை இருப்பினும் செறிவுமிக்கது. ஒரு மொழிக்கு உட்பட்ட சொற்களை ஆராய்வது சொல் ஆராய்ச்சி. பலமொழி களை ஒப்பு நோக்கி ஆராய்வது மொழியாராய்ச்சி என வரம்பிட்டுச் சுட்டுகிறார். தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் ஓரளவு தமிழ்நாட்டில் இருந்ததேனும் விரிவான முறையிலும் நெறிப்பட்ட வகையிலும் சொன்னூலும் மொழி நூலும் நாம் பெற்றது மேலையரிடமிருந்தே” என்கிறார். சொன்னூலும் அதை அடிப்படையாகக் கொண்ட மொழி நூலும் மாந்த நூல், உள நூல், வரலாற்று நூல் ஆகிய மூன்றற்கும் உறுதுணையாதலின் பண்பட்ட மக்கள் யாவரும் அவற்றைக் கற்றல் வேண்டும் என்று கடமை சுட்டுகிறார். எந்நோக்கத்தோடு இந்நூல் வெளிவருகிறது என்பதைத் தெள்ளிதின் விளக்குகிறார் பாவாணர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/50&oldid=1431350" இலிருந்து மீள்விக்கப்பட்டது