பக்கம்:தேவநேயம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் சொல்வழு, பொருள் வழு, வேர்வழு, இலக்கணவழு, மரபு வழு, அகராதி அமைப்பு வழு, அகராதி ஆசிரியர் குறை, சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக்குறை என எண்வகைப் பகுப்பொடு ஆய்வுப் பொருளாக்கி அறுதியிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் நோக்கங்கள் சிறந்தவை என்பதை முகப்பிலேயே பாராட்டுகிறார். "அந்நோக் கங்கள் மேனாட்டறிஞர்களால் வகுக்கப்பட்டமையே காரணம் என்கிறார். | 1. “இவ்வகராதி, சமயம் மருத்துவம் கணியம் முதலிய பல்துறை இலக்கியங்களில் வரும் கலையியற் சொற்கட்கும், அருகிய வழக்குச் சொற்கட்கும் கவனமாகப் பொருள் விளக்கியும் நெருடான சொற்களை விரிவாக ஆராய்ந்தும், மரபு நெறிப் பட்ட தமிழ்ப் புலவரின் கருத்திற்கு ஒத்ததாய் இருத்தல் வேண்டும்” 2. “இது தமிழுக்கும் பிற மொழிகட்கும் இடைப்பட்ட மொழியியல் உறவை எடுத்துக் காட்டி மேலையறிஞரின் சிறந்த கருத்தை நிறைவேற்றுவதாய் இருத்தல் வேண்டும்”. 3, “இது, உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் வழங்கும் சொற்களை ஆங்கிலச் சொற்களையும் மரபையும் கொண்டு தெளிவாக விளக்கி, தமிழ்மக்களுட் பெரும்பாலார்க்கும் ஆங்கிலம் அறிந்தோர்க்கும் பயன்படுமாறு, துல்லியமும் நிறைவும் இக் காலத்திற்கு ஏற்றதுமான அகராதியாய் இருத்தல் வேண்டும்” என்பன, சொல் வழுக்கள் என்னும் பகுதியில் 'சொல்லின்மை' என்பதைப் பெருங்குறையாகக் கூறி, 1. தனிச்சொல், கூட்டுச் சொல், மரபுவினைச் சொல், இணைமொழி ஆயவை இன்மை, 2. சொல்லின் மறுவடிவின்மை , 3, சொல்லின் இலக்கண வடிவின்மை, 4 கூட்டுச் சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை 5. மிகைபடு சொற்கள், 6. விளக்க மேற்கோளில் வரும் சொல்லைக் குறியாமை, 7.சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையில் சேர்த்தல் 8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல் 9. குறிக்கவேண்டாத சொல்லைக் குறித்தல், 10. தமிழுக்கு வேண்டாத வேற்றுச் சொல்லைக் குறித்தல், 11. இனச்சொல் இன்மை, 12. திசைச் சொல் இன்மை, 13. எழுத்துக் கூட்டல் வழு, 14. ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு முறைத்தவறு எனப் பதினான்கு வகைக் குறைகளையும் நூற்றுக்கணக்கான சொற்களைச் சுட்டிக் காட்டி நிறுவுகிறார். பொருள்வழுக்கள் என இயல்விளக்கம் அல்லது சொற் பொருள் தமிழிற் கூறப்பெறாமை, குன்றக் கூறல், மிகைப்படக் கூறல், வழுப்படக் கூறல், சிலபொருள் கூறப்படாமை , பொருள் வரிசை இன்மை, வடமொழியிற் பொருள் கூறல், ஒரு பொருட் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/49&oldid=1431349" இலிருந்து மீள்விக்கப்பட்டது