பக்கம்:தேவநேயம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் சுருக்கம் பாவாணர் ஒரே மொழியிலுள்ள சொற்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பிறப்பு, பொருளுணர்த்துமுறை, திரிபு முதலியவற்றை ஆளும் நெறிமுறைகளை விளக்கும் நூல் சொல்லியல் நூலாம். (Etymology) ஆகவே சொல்லியல் நூல், மொழி நூலின் உட்கூறாம். இவற்றுள் முன்னது பின்னதனுள் அடங்கும். பின்னது முன்னதனுள் அடங்காது என்பது அது. "இயல்பான மொழிகளும் சொற்களும் ஒருநெறிப்பட்டே தோன்றி இயங்குகின்றமையின், முறைப்படி ஆராயின் அவற்றின் நெறிமுறைகளையெல்லாம் கண்டு கொள்ளலாம் என்பது இச்சுட்டு விளக்கத்தை தடுநிலையாய் நுணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம்" என நூலின் பயன்பாட்டை உரைக்கிறார். தமிழ் தோன்றிய வகை, தமிழ் தனி இயற்கை மொழியாதல் தமிழில் சொல் தோன்றிய வகைகள், தமிழ்ச் சொற்களின் காரணக் குறித்தன்மை, தமிழில் நெடில் முன்னர்த் தோன்றியமை என்பவற்றை விரித்து முன்னுரையாக வரையும் பாவாணர் சுட்டுத் தோற்றத்தில் ஐவகைச் சுட்டுகளை முன் வைக்கிறார். சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையில் அகலித்தபோது 'ஆ' என்னும் ஒலியும், அண்மைச் சுட்டாக வாயைக் கீழ் நோக்கி விரித்தபோது 'ஈ' என்னும் ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன்னோக்கிக் குவித்தபோது 'ஊ' என்னும் ஒலியும் உயரச் சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது 'ஓ' என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச் சைகை ஒலிகள். பின்னர் வயிறார உண்டபின் அடிவயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட்டதினின்று 'ஏ' என்னும் ஒலி எழுகைச் சுட்டாகக் கொள்ளப்பட்டது எனத் தெளிவிக்கிறார். பாவாணர் விளக்கும் சுட்டு மேலும் விரிவுற்றே 1953 இல் முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கமாகியது எனலாம். கத்தொலிகளும் ஒலியடிச்சொற்களும், உம் என்னும் சொல், குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் என்பவை பின் இணைப்பாக விரிக்கப்படுகின்றன. 10. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு இப்பெயரிய சுவடி 1961 இல் வெளிவந்தது. பக்கங்கள் 56. விலை 75 புதுச்சல்லி. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தூய தமிழ்ப் பணிக்கு இடமில்லாமையை உரைக்கும் பாவாணர், "புக்கில் அமைந்தின்று கொல்லோ சிலரிடைத் துச்சில் இருந்த தமிழ்க்கு” என மாற்றுக் குறள் ஒன்று யாத்து முகவுரையை நிறைவு செய்கிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/48&oldid=1431348" இலிருந்து மீள்விக்கப்பட்டது