பக்கம்:தேவநேயம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் கடைசிப் பாடம் 'வாசிக்கும் முறை' என்பது. 'கரிவதனா ஈசன்' என்ற மெட்டு. "எழுந்து நின்றதும் நூலை இடக்கையில் பிடிப்பாய் அழுந்த ஒலித்துப் பொருள் அறியவே டடிப்பாய் "நேராக நின்று கைகால் நெகிழ விடாதே மார்பு முன் நூலைப்பிடி முகம்ம றைக்காதே” என்பவை முதலிரு கண்ணிகள் பாட்டி ஊட்டும் பாற்சோற்றுப் பதம் இப்பாடல்கள்! 9. சுட்டு விளக்கம் சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து என்பது இதன் பெயர். 'ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம் 2ஆம் பாகம் முற்பகுதி' என்னும் தலைப்புக் குறிப்பு இந்நூற்கு உண்டு, 1943இல் வெளிவந்த இந்நூலின் முதல் நான்கு படிவங்கள் திருச்சி இம்பீரியல் அச்சகத்திலும், எஞ்சியவை செங்குந்தமித்திரன் அச்சகத்திலும் அச்சிடப்பட்டுள்ளன என்பது அறிய வருகின்றது (104) சுட்டு விளக்கம் அச்சிடும் காலத்தில் பாவாணர் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராக இருந்துள்ளமையும் அப்பொழுதே பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளராக இருந்தார் என்பதும் பெயர்க் குறிப்புகளால் புலப்படுகின்றன. இவ்வாசிரியர் எழுதிய நூல்கள் தி.தெ.சை.சி, கழகத்தில் கிடைக்குமென அறிவித்துள்ளார். முன்னுரை, சுட்டுத் தோற்றம், சுட்டுப் பெயர்ச் சொற்கள், மூவிடப் பெயர்கள், வினாப்பெயர் என்னும் ஐம்பகுப்பில் நூல் விளங்கு கின்றது. பக்கங்கள் 104. பின்னிணைப்பு இப்பக்கங்களுள் 6 பக்கம் உள்ளது. விலை. ரூ.1/4 என்றுளது. மொழிநூல் சொல்லியல் நூல் என்னும் இரண்டன் வேறுபாட்டை முகவுரையில் முன்வைக்கிறார். மொழிகள் தோன்றிய வகை, அவை வளர்ந்த முறை, அவற்றுள் ஒன்றோடொன்றுக்குள்ள தொடர்பு முதலியவற்றை விளக்கும் நூல் மொழி நூலாம் (Philology).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/47&oldid=1431347" இலிருந்து மீள்விக்கப்பட்டது