பக்கம்:தேவநேயம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 8. சிறுவர் பாடல் திரட்டு Songs of Children என ஆங்கிலத் தலைப்பிலும், சிறுவர் பாடல் திரட்டு எனத் தமிழிலும் தலைப்பிட்டு வெளிவந்த சுவடி இது. 1924 இல் வெளிவந்துளது. ஞா. தேவநேசப் பாவாணன் என்று ஆசிரியர் பெயர் உள்ளது. சிறுவர் உள்ளங்களைப் பாட்டு, விளையாட்டு, கதை, கைவேலை என்பவற்றின் வழியாகக் கவர்ந்து கற்பித்தல் பயன் செய்யும் என முகவுரையில் கூறுகிறார். அந்நோக்கில் செய்யப் பட்டது இச் சுவடி என்பதையும் சுட்டுகிறார். ஒன்றாம் பாடம் என்பது முதலாக இருபத்தொன்பதாம் பாடம் ஈறாகக் குறிப்பிட்டுப் பாடல்களை அமைக்கிறார். ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு பாடலாக இசை மெட்டுடன் உள்ளது. கடவுள் வணக்கத்தில், "அன்னை தந்தைநீ அண்ணன் தம்பிறீ முன்னும் பின்னும் நீ மூவா மருந்து நீ” என்பது ஒரு கண்ணி . | "கலகம் நீங்கியோர் கட்டாய் இருக்கவே உலகம் யாவையும் ஒருமைப் படுத்துவாய்” என வேண்டுகிறார். “வாசுதேவனே வந்தாளும்' என்ற மெட்டு கப்பலைப் பார்! கப்பலைப்பார்! கடலுள்ளே கப்பலைப்பார்! தெப்பத்தேர் ஓட்டம் போல் தெரிகின்ற கப்பலைப்பார்! இக் கப்பல் பாட்டு, 'முத்திநெறி' அறியாத என்ற மெட்டு, "அலைமேலே தொட்டில் போல் ஆடியாடிப் போகிறதே உலைமேலே புகைபோலே உயரத்தான் புகைகிறதே” என்பது அதன் மற்றொரு கண்ணி. வண்ணத்துப்பூச்சியைப் பற்ற, அதன் சிறகு ஒடிய, "ஐயையோ நான் என் செய்வேன்” என வருந்தி "பதைக்குதே என் உள்ளமும் பாவம் பூச்சிகளை இனி வதைக்க மாட்டேன் அன்னையும் வந்தால் சொல்வேன் உண்மையே” எனத் திருந்துவதாக முடிக்கிறார். இது 'யாரம்மா வண்டியிலே' என்ற மெட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/46&oldid=1431346" இலிருந்து மீள்விக்கப்பட்டது