பக்கம்:தேவநேயம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் "அன்பீனும் ஆர்வ முடைமை” "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” என்னும் மூன்று குறள்மணிகளும் செறிந்தது இப்பாட்டு, அன்றியும் 'புன்கணீர் பூசல்' என்பதைப் புதவுடை வெள்ளத் திற்கு - மதகினை உடைத்துத் தாவிச் செல்லும் வெள்ளத்திற்குஉவமை காட்டுதல் அருமைமிக்கது. புதவு-புதவக்கதவம் எனப்படும். மடைநீரைக் காத்து நிறுத்தவும் வெளிப்படுத்தவும் அமைந்தது புதவம் என்பதாம். மடைதிறந்த வெள்ளம் போல என்பது பழமொழி. 'மன்னுயிர்' என்பதை நிலைபேறாம் இறைமைக்கும், குமரனாக வந்த கிறித்துவுக்கும் இரட்டுறலாக்கி இறைமை எய்துதலே மாந்தப் பிறவி நோக்கு என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டுதல் 'பாவாணர்' நுண்ணோக்கை வெளிப்படுத்தும் (2) அவையடக்கம் தொன்று தொட்டது. பாவாணர் "காட்டுறப் பிழைகள் தோன்றாக் கல்வி நூல் உலகத்துண்டோ ?” என்னும் முறையால் பிழை இருத்தல் எந்நூற்கும் இயற்கை; இந்நூற்கும் தகும் அது” எனச் சொல்லுதல் புதுவரவாகும் "உலகெலாம் ஆளும் ஒருவனே எனினும் அவன் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அவனுக்கு ஆகும் ஆதாயம் யாது" என்பது இழக்கக் கூடாதது இன்னது என்னும் பேரறை கூவலாகும். நான் சுத்தம் உயிர் மெய் என்பதால் “நானே வழியும் சீவனும் சத்தியமாயும் இருக்கிறேன்" என்பதைக் கூறுவது நூற்பா அமைவினதாம். "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நசரேய நமவென்னா நாவென்ன நாவே" என்பவை ஐந்தும் சிலம்பின் நடைமட்டுமோ இம்மண்ணின் மணம் கமழும் சீர்மையே அல்லவோ! குமரவணக்கம் என்னும் தலைப்பிட்ட பாடல் 'கானடா-ஆதி" என்பது. “இப்பாட் டொன்றும் என் உடனாசிரியர் ஏ.வி.சீநிவா சையர் அவர்கள் தெரிவித்தது” என்னும் குறிப்பைப் பாவாணர் வரைந்திருப்பது நூல் நூலாகப் படியெடுத்துக் கொண்டு தாமே படைத்தார்போலக் காட்டும். பொய்ம்முகங்களைக் கீறிக் கிழித்த தகைமையதாம். மீள்பதிப்பு இல்லையேல் முதல்பதிப்பு வாய்த்திராது. அதனை மீட்டளித்த வேதாகம மாணவர் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/45&oldid=1431345" இலிருந்து மீள்விக்கப்பட்டது