பக்கம்:தேவநேயம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 தேவநேயம் தேவநேயம் அதனாலேயே இந்திய ஒன்றியமும் மதவியலைத் தழுவாது உலகிய லையே தழுவியுள்ளது” என்றும், "பிறவியில் அமையும் தீயநிலைமைகட்கும் இயற்கையில் நேரும் துன்பநேர்ச்சிகட்கும் இறைவனே கரணியம் ஆகான்” என்றும் இணைப்புப் பகுதியில் கூறுவன அரசும் மக்களும் ஆழமாக எண்ணிப் போற்றத் தக்கனவாகும். தமிழர் மதம் 1972 இல் நேசமணி பதிப்பக வெளியீடாக ஆறேகால் உருவா விலையில் வெளிவந்ததாகும். 19. தமிழர் வரலாறு நேசமணி பதிப்பக வெளியீடாக 1972 இல் வெளிவந்த நூல் தமிழர் வரலாறு. அதன் விலை உருபா 12.50. "இது மதுரை மணிவிழாக்குழுவார் 1967 இல் தொகுத்தளித்த நன்கொடைப்பயனாக வெளிவருகின்றது” என முகவுரையில் வரைகிறார் பாவாணர்; 'பாவாணர் மணிவிழாக் குழு'வைப் பற்றி 7 வெண்பாக்கள் இடம் பெற்றுள. முன்னுரை ஞாலமுந்திய நிலை, ஏழு தீவகம், நாவலந் தீவின் முந்நிலைகள், குமரிக்கண்டம், மாந்தன் பிறந்தகம், நாகரிக மாந்தன் பிறந்தகம், தமிழன் பிறந்தகம், தமிழ் வரலாற்றடிப்படை, தமிழர் வரலாறு அமையும் வகை என்னும் ஒன்பது உட்டலைப்புகளில் இயல்கின்றது. தமிழர் தோன்றிய இடமும், தமிழ் தோன்றிய இடமும் குமரிக்கண்டம் என்பதாலும், அத்தமிழரே உலக முதன்மாந்தர், அத் தமிழே உலகமுதன் மொழி என்பதாலும், தமிழாய்வின் அடி மணையாகக் குமரிக்கண்ட ஆய்வு இருப்பது கொண்டு பாவாணர் தம் பல நூல்களிலும் குமரிக்கண்டம் பற்றியே ஆய்கிறார் எனல் குறிப்பிடத் தக்கதாம். தனிநிலைக் காண்டம், கலவுநிலைக் காண்டம் தெளிநிலைக் காண்டம் என முக்காண்டங்களைக் கொண்டதாகின்றது தமிழர் வரலாறு, பின்னிணைப்பும் உண்டு. மொத்தப் பக்கம் 370. தனிநிலைக் காண்டத்தைக் கற்காலம், பொற்காலம், செம்புக்காலம், உறைக்காலம் இரும்புக் காலம் எனப் பகுத்தாய்கிறார். பின்னர்த் தலைக்கழகம் இடைக்கழகம் கடல்கோள் ஆகியவை பற்றி விரிவாக ஆய்கின்றார் (27-156). கலவுநிலைக் காண்டம் என்னும் இரண்டாம் பகுதியில் ஆரியர் இந்தியாவிற்குட் புகவு தொடங்கி, ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்கு விளைந்த கேடுகள் ஈறாக இருபது குறுந்தலைப்புகளில் ஆய்வு நடாத்துகின்றார் (159-305). தொல்காப்பியம், கடைக்கழகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/69&oldid=1431386" இலிருந்து மீள்விக்கப்பட்டது